கோயிலில் எப்படி வணங்க வேண்டும்?

கோயிலுக்கு செல்லும்போது நம் பாரம்பரிய உடைகளான ஆண்களாக இருந்தால் வேஷ்டி, சட்டை அணிந்து செல்வது நல்லது. பெண்களாக இருந்தால் நம் பாரம்பரிய உடைகளான சேலை, பாவாடை, தாவணி போன்றவை அணிந்து சென்று வணங்குவது நல்லது. நாம் அணியும் உடை மற்ற பக்தர்களுக்கு அருவருப்பாகவோ, அவர்கள் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் இருக்க கூடாது. கோயிலில் அது போன்று செய்யும்போது அந்த பாவம் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் தீராது.  

ஆண்களாக இருந்தால் மேல் சட்டை இல்லாமல்  தரிசனம் செய்யும்போது கோயில் பிரகாரத்தில் சுற்றி கொண்டு இருக்கும் அதிர்வலைகள் நேரடியாக உடம்பில் பட்டு நன்மையை செய்யும். எனவே ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும்.   

கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அங்கு இறைவன்தான் பெரியவன். அவனின்றி வேறு யாரும் பெரியவர்கள் கிடையாது. எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள்  கோயிலுக்கு வந்தாலும் சாமியை வணங்குவதை விட்டு விட்டு அவர்களுக்கு வணக்கம் செய்வது ஏற்று கொள்ள தக்கதல்ல.

அதைபோன்று இறைவனுக்கு முன்போ அல்லது கோயில் பிரகாரதிலோ தன்னை தானே சுற்றுவது தவிர்க்கப்பட வேண்டும்.   

கோயிலில் தரப்படும் பிரசாதங்கலான திருநீறு, குங்குமம், பூ போன்றவற்றை வீட்டில் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால் சில நல்ல அதிர்வலைகள் நம் வீட்டிலும் சுற்றி கொண்டு நன்மையை செய்யும்.