திருமணம் என்பது எல்லோருக்கும் நினைத்த மாத்திரத்தில் நடந்து விடாது.
ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி. நல்ல அழகிருக்கும். நல்ல திறமை இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். நல்ல வேலை இருக்கும். நல்ல தொழில் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்
திருமணம் என்பது தள்ளி போய் கொண்டே இருக்கும்.
சிலருக்கு பார்த்தல் வசதி என்பது இருக்காது, மிகவும் ஏழையாக இருப்பார்கள் ஆனால் திருமணம் ஆகி சந்தோசமாக வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள்.
சிலருக்கு நல்ல வசதி இருக்கும். பெற்றோர்களும் பையனுக்கோ பெண்ணுக்கோ வேண்டிய அளவு சீர் செய்ய வேண்டிய அளவிற்கு யாரிடமும் கடனே வாங்காமல் திருமணத்தை முடிக்க வேண்டிய அளவிற்கு வசதி இருக்கும்.
ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் திருமணம் தள்ளி கொண்டே அல்லது எப்போது நடக்கும் என்று தெரியாமலையே கவலையுடன் இருப்பார்கள்.
இதற்க்கெல்லாம் ஜோதிடரீதியாக என்ன பதில்?
ஒருவருடைய ஜாதகதினை வைத்து அந்த ஜாதக கட்டங்களில் உள்ள கிரக நிலைகளை வைத்து ஒருவருக்கு எந்த கால கட்டத்தில் திருமணம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சில ஜாதகங்களில் சில தோஷங்கள் திருமணத்தை தள்ளி கொண்டு செல்லும். கலத்திரகாரகனின் நிலை, ஏழாம் அதிபதியின் நிலை, மறைவு ஸ்தானதிபதிகளின் நிலை, நடப்பு தசா புத்தி, கோச்சாரத்தில் கிரகங்களின் நிலைமை போன்ற என்னும் சில ஜாதக அமைப்புகளை வைத்து
எந்த காலத்தில் திருமணம் நடக்கும் என்பதினை தெரிந்து கொள்ளலாம்.
சிலருக்கு காலம் தாழ்த்தி திருமணம் செய்தால் நல்லது என்று ஜாதக அமைப்பு இருக்கும் அது போன்ற ஜாதகர்களுக்கு காலம் தாழ்த்தி திருமணம் செய்தால்
பிற்கால மண வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். அதுபோன்ற ஜாதகர்களுக்கு
சீக்கிரம் திருமணம் நடந்தால் அது விரைவிலேயே விவாகரத்து ஆகி விடும்.
சிலருக்கு திருமணத்தை காலம் தாழ்த்தவே கூடாது விரைவில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். அதுபோன்ற ஆணுக்கு அல்லது பெண்ணுக்குவிரைவில் திருமணம் செய்து வைத்தால் தேவை இல்லாத சில பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள