காதல் திருமணங்கள் சந்தோசமான திருமண வாழ்க்கையாக அமைய?

இன்றைய சமூக சூழ்நிலையில் முன்பிருந்ததைவிட காதல் கல்யாணங்கள் தான் நிறைய நடக்கின்றன. ஆனால் இந்த கல்யாணங்கள் கல்யாணத்திற்கு பின்பு நீடித்து நிற்கின்றனவா என்பதை பார்த்தால் அதற்குண்டான பதில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் அதையும் மீறி சில காதல் கல்யாணங்கள் செய்து கொண்ட கணவன் மனைவி குடும்ப வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கின்றனர். அதை இருவரும் மனம் விரும்பி நடத்தி செல்கின்றனரா அல்லது நாம் தேடி கொண்ட வாழ்க்கை மற்றவர்கள் நம்மை பார்த்து ஏளனம் செய்து விடக்கூடாது என்று மான மரியாதைக்கு பயந்துகொண்டு பிரச்சனைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாத அளவிற்கு ஒப்புக்கு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பார்கள்

இதையும் மீறி உண்மையிலேயே காதல் கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பவர்களும் எங்கோ ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

ஆனால் பெரும்பாலான காதல் திருமணங்கள் கடைசிவரை
நீடித்து நிற்பதில்லை. இதில் மிகவும் பாதிக்கபடுவது அவர்களுடைய குழந்தை. விவகாரம் கோர்ட் வரை சென்றால் குழந்தை தாயிடம் அல்லது தந்தையிடம்.
தாயோ தந்தையோ தான் பெற்ற குழந்தையை கோர்ட் அனுமதிதபடிதான் பார்க்க முடியும் அல்லது பேச முடியும். மீறினால் தண்டனை
மிகவும் கஷ்டமாக இல்லை நினைப்பதற்கே.

ஏன் இதுபோன்ற நிலை? என்ன காரணம்?.

ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு இல்லாமைதான் காரணம். வெளி கவர்ச்சி, காதலிப்பவர்களின் இன்னொரு முகம் தெரியாமல் காதல் வயப்பட்டு திருமணம் வரை சென்று வெளி கவர்ச்சி என்னும் சாயமும், உண்மையான இன்னொரு முகமும் திருமணதிற்கு பின்பு,  மழையில் கரைந்த  சாயத்தை போல காணமல் போகும்போது பிரச்னை உருவாகிறது. அன்னியன் விக்கிரம் போன்று பகலில் ஒரு முகம் இரவில் இன்னொரு முகம் அது ஆணாகட்டும் அல்லது  பெண்ணாகட்டும்.

இதுபோன்று கவர்ச்சிக்கு மயங்கி திருமணம் செய்த ஜோடிகள் விரைவில் விவாகரத்து வரை சென்று விடுகின்றனர். பெற்றோர்களிடம் உள்ள பிரச்னை காரணமாக குழந்தையின் மனநிலை பாதிக்கப்பட்டு   social problem ஆக உருவாகிறது. எத்தனயோ செய்திகள் தினமும் பத்திரிக்கைகளில்.           

சரி இதுபோன்று ஏன் நிகழ்வுகள்?

மனித உடம்பு என்பது கிரகங்களின் கலவையினால் ஆனது.இந்த கிரக கலவையின் ஒரு சில அங்கங்கள்தான்  மனிதனுடைய சிந்தனை, செயல், மற்றவர்களை அனுசரித்து செல்லுதல் போன்றவை. ஒரு மனிதனுடைய சிந்தனை, செயல், மற்றவர்களை அனுசரித்து செல்லுதல் போன்ற மனப்பான்மை மற்றவர்களுடன் ஒத்து செல்லும்போது அங்கு பிரச்னை ஏற்படுவதில்லை.

திருமணமும் இதற்க்கு விதி விலக்கு  அல்ல.

இரு உடம்பில் உள்ள கிரக கலவைகள் ஒத்து செல்லும் திருமண ஜோடிகள் ஒன்று சேரும்போது அங்கு விவாகரத்திற்கு வேலையே இல்லை.  அந்த காலத்தில் இப்போது உள்ளது போல் விவாகரத்து வழக்குகள் இல்லாததற்கு காரணம், திருமணதிற்கு முன்பே திருமணம் செய்ய போகும் ஜோடிகளுக்கு கிரக பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துதான் திருமணத்தை நிச்சயம் செய்வார்கள். அதைதான்  திருமண பொருத்தம் என்றும் சொல்வர். இப்போதும் ஒரு சிலர் திருமண பொருத்தம் பார்க்கின்றனர். அதுபோன்ற திருமணங்கள் பெரும்பாலும் தோல்வி காண்பதில்லை.

எனவே திருமணங்கள் வெற்றியடைய நம் முன்னோர்கள் கடை பிடித்த திருமண பொருத்தம் போன்ற வழிகளை கடை பிடித்தோம் என்றால் திருமண வாழ்க்கை என்பது சந்தோசமான வாழ்க்கையே.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள