வேலை என்பது ஒருவருடைய வாழ்க்கையில் பல வித திருப்பங்களை ஏற்படுத்த கூடியது. ஒருவருக்கு நல்ல வேலை அமைந்தால் அவருடைய வாழ்க்கையின் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ ஆரம்பிக்கின்றன.
இந்த வேலை என்பது ஒருவருக்கு உரிய காலத்தில் அமைந்தால் அவருடைய வாழ்வில் பல நல்ல நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. உதாரனத்திற்க்கு திருமணம்.
ஆனால் எல்லோருக்கும் உரிய காலத்தில் வேலை கிடைத்து அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கின்றனரா?
பெரும்பாலனவர்கள் மிகவும் கால தாமதமாகவே தங்களுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கின்றனர். காரணம் தாமதமாக அமையும் வேலை வாய்ப்பு.
சரி ஒருவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்பதை ஜாதக ரீதியாக சொல்ல முடியுமா? சொல்லலாம் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்துள்ள இடம், தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கிரகம், இவைகள் பகை, நீசம், மறைவு பெறாமல், தீய கிரக பார்வை கூட்டணி இன்றி இருந்தால் வலுவான கிரகங்கள் நடத்தும் திசை அல்லது புத்தியில் கிடைக்கலாம்.