சினிமா தொலைகாட்சியில் புகழ் வெற்றி பெரும் வாய்ப்பு யாருக்கு?

சினிமா துறை என்பது பொதுவாக மக்களிடையே வெகு சுலபமாக 
பிரபலமடைய செய்யும் சாதனம். அது போன்று தான் தொலைக்காட்சியும். இப்பொழுது தொலை காட்சியின் ஆதிக்கம் நிரம்ப வந்து விட்டதால் தொலை காட்சியும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகிவிட்டது.

சினிமா, தொலை காட்சி என்றால் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. நடிப்பு துறை, இசை துறை, நடன துறை, பின்னணி குரல் துறை போன்ற இன்னும் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. நிறைய பேர் புதிது புதிதாக இந்த துறைக்கு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் நீண்ட காலம் அந்த துறையில் அதாவது நடிப்பு துறையாகட்டும் அல்லது இசை துறையாகட்டும் அல்லது வேறு எந்த துறையாகட்டும் நிலைத்து நிற்கின்றனர்.

கடந்த கால முன்னணி ஹீரோக்களும் சரி இப்போதையா முன்னணி ஹீரோக்களும் சரி ஒரு சிலர் மட்டுமே ever green star ஆக இருந்து கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலோனர் வந்த வேகத்திலயே காணமல் போய் விடுகின்றனர். காரணம் என்ன?

சினிமா துறையில் தொலை காட்சி துறையில் புகழ் வெற்றி பெறுவதற்கு   ஜாதக ரீதியாக் சம்பந்தம் உண்டா?

சம்பந்தம் உண்டு. சினிமா துறையாகட்டும் அல்லது தொலை காட்சி துறை யாகட்டும். இந்த இரண்டு துறையிலும் பிரபல்யமாக ஆவதற்கு முதலில் கற்பனா சக்தி வேண்டும்.

அடுத்து நடிப்பு துறையாக இருந்தால் அழகு வேண்டும். அதற்க்கு அடுத்து எந்த துறையில் ஈடுபடுகிறாரோ அதாவது நடிப்போ, இசையோ, நடனமோ அந்த துறையை பற்றிய அனுபவ அறிவு வேண்டும்.

இவை அனைத்தையும் ஒருங்கே தருவதற்கு ஒருவருடைய ஜாதகத்தில் மாத்ருகாரகன்  வலுவுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் கற்பனா சக்தி நன்றாக இருக்கும். அடுத்து வித்யாகாரகன் பலமுடன் இருக்க வேண்டும் இருந்தால்தான் தான் ஈடுபட போகும் துறையை பற்றிய அனுபவ அறிவு கிடைக்கும். களத்திர காரகன் வலுவுடன் இருந்தால்தான்  மக்களை கவரும் முக கவர்ச்சி இருக்கும்.

இவை அனைத்தும் ஒருங்கே பெற்றால்தான் சினிமா துறையிலும் சரி தொலை காட்சி துறையிலும் சரி தான் ஈடுபடும் பிரிவில் அதாவது நடிப்போ, இசையோ, நடனமோ இவற்றில் பிரபல்யமாக முடியும். கால காலமாக அந்த துறையில் நீடித்து நிற்க முடியும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள