டாக்டர் தொழிலில் யாருக்கு புகழ் வெற்றி கிடைக்கும்?

டாக்டர் பணி  என்பது மிகவும் புனிதமான தொழில். கடவுளுக்கு படைக்கும் ஆற்றல் இருப்பது போல உயிர்களை காக்கும் ஆற்றல் மருத்துவர்களுக்கு உண்டு. அதனால்தான் மருத்துவ தொழிலை ஒரு புனிதமான தொழில் என்று கூறுகிறோம்.

மனிதர்களுக்கு வியாதிகள் அதிகமாக அதிகமாக மருத்துவ மனைகளும் அதிகமாகி கொண்டு வருகின்றன. அதனால் டாக்டர் தொழிலுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகின்றன. டாக்டர் தொழிலுக்கு படிக்கும் ஆர்வமும் கூடி வருகிறது.

எல்லா மருத்துவர்களும் தங்களுடைய தொழில் ஒரு வெற்றிகரமான டாக்டர் அல்லது புகழ் பெற்ற டாக்டர் என்ற பெயரை எடுப்பது சற்று கடினமான் விசயம்தான். ஒரு பக்கம் பெருகி வரும் மருத்துவமனைகளும் மறுபக்கம் மருத்துவத்திற்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதும் ஒரு காரணம். இவைகள் ஒரு நல்ல விசயமாக இருந்தாலும் கூட மருத்துவ படிப்பை முடித்து விட்டு வரும் எல்லா மருத்துவர்களினாலும் அல்லது ஏற்கனவே பல வருடங்கள் மருத்துவ தொழில் இருக்கும் மருத்துவர்களினாலும் ஒரு சிறந்த மருத்துவர் என்ற பெயர் எடுப்பது அல்லது வெற்றியை பெறுவது இயலாத காரியமாக உள்ளது.

ஜோதிடரீதியாக பார்த்தோம் என்றால் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தொழிலை சிறப்பாக செய்ய தங்கள் வசம் வைத்துள்ளன. அதன் பிரகாரம் பார்க்கும் போது ஒருவருடைய ஜாதகத்தில் பிதாகாருகன் வலுவான இடத்தில அமைந்து, கெட்டு  போகாமல் இருந்து, நல்லவர்கள் கூட்டுடன் இருந்து, நல்லவர்கள் பார்வை பெற்று இருந்தால் மருத்துவ துறையில் ஈடுபட்டு புகழ் பெற்ற மருத்துவர் ஆக வெற்றியுடன் தொழில் செய்யலாம்.

அதேபோன்று ஒருவருடைய ஜாதகத்தில் புகழ் பெற்ற வெற்றிகரமான அறுவை சிகிச்சை மருத்துவர் ஆக வேண்டும் என்றால் சகோதர காரகன் எனப்படும் சிவப்பு  நிறத்துக்கு உரியவன் வலுவான இடத்தில அமைந்து, கெட்டு  போகாமல் இருந்து, நல்லவர்கள் கூட்டுடன் இருந்து, நல்லவர்கள் பார்வை பெற்று இருந்தால் மருத்துவத்தில் அறுவை துறையில் ஈடுபட்டு புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராக ஆக வெற்றியுடன் தொழில் செய்யலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள