கடன் பிரச்சனையில் மீள முடியாமல் இருப்பதற்கு காரணம்?

எனக்கு வரும் கேள்விகளில் பெருமபாலனவை அளவுக்கு மீறிய கடன் இருக்கிறது, கடன் கழுத்தை நெரிக்கிறது, ஊரை விட்டு ஓடி போகலாமா போன்ற கேள்விகள் தான் அதிகம். இது போன்ற கேள்விகளுக்கு காரணம் என்ன?

கடன் வாங்குவது சில காரியங்களுக்கு சில நேரங்களில் அவசியம் என்று இருந்தாலும் கூட அப்படி வாங்கும் கடன்களை திருப்பி கொடுப்பதற்கு தகுந்தவாறு அவர்களுடைய வியாபாரத்தில் அல்லது தொழில் நல்ல வருமானம் வரும். அதை வைத்து கடனையும் அடைத்து மேற்கொண்டு லாபம் சம்பாதிப்பார்.

ஆனால் சிலருக்கு நான் மேலே குறிப்பிட்டவாறு கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன், ஊரை விட்டு ஓடி போகும் அளவிற்கு கடன் ஏற்பட காரணம் என்ன?

அவர்கள் பார்க்கும் தொழில் அல்லது வேலை தான். செய்யும் தொழிலும் வேலையும் இன்றைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் அல்லது தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டு சம்பாதிக்க வேண்டும். அப்பொழுதுதான் செய்யும் தொழிலும் வேளையிலும் நன்றாக சம்பாதித்து
வாழ்க்கையை கடனின்றி ஓட்ட முடியும்

சரி ஒருவருக்கு கடன் ஏற்படுகிறது?

பொருத்தமில்லாத ஒரு வேலையையோ தொழிலையோ செய்யும்போது போதுமான வருமானமே அதில் இல்லாமல் மேற்கொண்டு மேற்கொண்டு கடனை வாங்கி அந்த தொழிலை பிரயோஜனம் இல்லாமல் செய்து கொண்டு இருந்தால் கடந்தான் மேற்கொண்டு மேற்கொண்டு ஏறிக்கொண்டு இருக்கும்

சரி அப்படி தாங்க முடியாத அளவிற்கு கடன் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மாற்றி சிந்திக்க வேண்டும்? இனிமேலும் இதே தொழிலை செய்யலாமா மாற்று தொழில் என்ன அல்லது வேலைக்கு செல்வதுதான் உத்தமமா என்று சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் மாற்று தொழிலை செய்து கடனில் இருந்து மீளலாம் இல்லையென்றால் ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போன்றுதான்

அப்படி சிந்தனை செய்யாமல் பைத்தியம் பிடித்தது போல் இருப்பதுதான் கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியாமல் இருப்பதற்கு காரணம்.

சரி மாற்றி சிந்தனை செய்வதுற்கு ஜோதிடம் கை கொடுக்குமா?
கை கொடுக்கலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி நிலை, அம்சத்தில் அவருடைய நிலை, லாப ஸ்தான நிலை, தன ஸ்தான நிலை, பார்வை, கூட்டணி, மறைவு, பகை, நட்பு, நீசம் இவற்றின் அடிப்படையில் அவர் செய்யும் தொழிலையே தொடர்ந்து செய்யலாமா அல்லது பொருத்தமில்லாத தொழிலை செய்கிறாரா என்று தெரிந்து அதற்க்கு தகுந்தாற்போல் முடிவு எடுத்தோம் என்றால் தொழிலினால் உண்டாகும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவந்து சுபிட்சமாக வாழலாம். அப்படி தொழில் செய்வதே சரியில்லை வேலைக்கு செல்வதுதான் உத்தமம் என்றால் பொருத்தமான வேலையை தேர்ந்தெடுத்து கடன் பிரச்சனையிலிருந்து வெளி வர வேண்டும்


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 


"வாழ நினைத்தால் வாழலாம் வழியாய் இல்லை பூமியிலே"