மனித மனம் என்பது தவறாக வேலை செய்ய ஆரம்பித்தால் அவனை படுபாதாளத்தில் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்து விடும்.
சூதாட்டம் என்பதும் அது போன்றுதான். சூதாட்டங்களில் எத்தனயோ வகை இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்ததுதான். குதிரை ரேஸ், லாட்டிரி டிக்கெட்,பெட்டிங், சீட்டு போன்றவை.
இந்த பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்காது எப்போது பார்த்தாலும் அந்த சூதாட்ட விளையாட்டு மேலேயே நினைப்பு இருக்கும். பெண்டாட்டி, பிள்ளைகள், உறவினர்கள் பற்றிய சிந்தனையே இருக்காது.
அடுத்த நிமிடம், அடுத்த நாள் எப்படி ஜெயிப்பது விட்ட காசை எப்படி திரும்ப எடுப்பது என்ற சிந்தனையிலேயே முழுகி இருப்பார்கள் பக்கத்தில் ஒரு நாக பாம்பு படம் எடுத்து கொத்துவதற்கு நின்றால் கொத்தினால் கொத்தி விட்டு போகட்டும் என்று சூதாட்ட சிந்தனையிலேயே முழுகி இருப்பார்கள்.
மொத்தத்தில் ஒரு வேற்று உலக வாசி போன்று சிந்தனையிலேயே இருப்பார். சூதாட்ட சிந்தனை உடையவர்கள் மற்ற எந்த போதை பழக்கத்திற்க்கும் அடிமையானவர்களை விட மோசமானவர்கள்.
விட்ட காசை பிடிக்கிறேன் என்று இவர்களும் தங்களுக்கு தாங்களாகவே ஒவ்வொரு நாளும் குழியை நோண்டி குழிக்குள் புதைந்து ஒருநாளில் அந்த குழியே இவர்களை மூடிவிடும் நிலையில் இருப்பவர்கள்.
இவர்களுடைய சூதாட்ட வெறியால் ஒருவர் மட்டும் லாபம் அடைவார். அவர் யார் என்றால் இந்த சூதாட்டத்தை வைத்து நடத்தும் உரிமையாளர்.ஆனால் அவரும் ஒருநாள் இவரை போலவே சம்பாதித்த காசை எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்துவிடுவார். கண்டிப்பாக அது நடக்கும் நல்லபடியாக சம்பாதிக்காத காசு வந்த வேகத்திலயே வந்த வழியிலேயே திரும்பி சென்று விடும்.
சரி ஒருவர் சூதாட்டத்தில் தன்னையே மறந்து தன்னுடைய சொத்துக்களையும் இழந்து மன நிம்மதியும் இழப்பதற்கு காரணம் ஜோதிட ரீதியாக என்ன?
ஜாதகத்தில் புத்தி ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம், தன ஸ்தானம் விரயஸ்தானம், மன காரகன் போன்றவைகள் கிரக இருப்பு, கிரக கூட்டணி, கிரக பார்வை, இருக்கும் இடம் போன்றவைகளால் பாதிக்க படும்போது மனம் பேதலித்து பித்து பிடித்து இது போன்று சூதாட்டங்களில் ஈடுபட்டு தன்னையும் வருத்திக்கொண்டு தன குடும்ப உறுப்பினர்களையும் மன நோக செய்து சந்தோசமாக வாழ வேண்டிய வாழ்க்கையை நரகமான வாழ்க்கையாக மாற்றி கொள்வார்கள்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள