பங்கு மார்க்கெட்டில் யார் லாபம் சம்பாதிக்க முடியும்?

பங்கு மார்க்கெட் என்பது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை கணக்கிடும் அளவு கோல். இன்று நிறைய பேர் பங்கு மார்க்கெட்டில் ஈடுபட்டு ஷேர்களை வாங்கி  விற்று வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு சிலர் இதை பகுதி நேரமாகவும் ஒரு சிலர் இதை முழு நேரமாகவும் செய்து கொண்டு இருக்கின்றனர் ஆனால் எல்லோராலும் பங்கு மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியுமா?

இந்த கேள்விக்கு பெரும்பாலும்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் பங்கு மார்க்கெட் வியாபாரம் என்றாலே அது ஒரு யூக வணிகம். யூகத்தின் அடிப்படையில்தான் அந்த வியாபாரம். நிறைய கணக்குகள், புள்ளி விபரங்கள், போன்றவற்றின் அடிப்படையில் தான் அதில் லாபமும் நஷ்டமும்.
சரியாக யூகித்து கணக்கிட்டு வியாபாரம் செய்பவரகளதான் அதில் வெற்றியடைய முடியும் லாபம் சம்பாதிக்க முடியும். இன்னும் சொல்லபோனால் மூளையின் அடிப்படையில்தான் பங்கு மார்க்கெட்டில் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியும். அவசரமும் கூடாது, நிதானமும் கூடாது, சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து ஷேர் ஐ வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். இல்லையென்றால் பெருத்த நஷ்டம்தான் ஏற்படும்

சரி ஜோதிட ரீதியாக பங்கு மார்க்கெட் யாருக்கு வெற்றியை தரும்?

ஒருவருடைய ஜாதகத்தில் பஞ்சம ஸ்தானம் என்பது மனது சம்பந்தப்பட்டது
இந்த பஞ்சம  ஸ்தானம் கெடாமல் இருந்தால் தான் மூளை ஒழுங்காக வேலை செய்யும். மூளை ஷார்ப்பாக வேலை செய்ய வேண்டும். ஷார்ப்பாக வேலை செய்தால் தான் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க முடியும். பஞ்சம ஸ்தானம் கெட்டு விட்டால் அவர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதேபோன்று லாப ஸ்தானமும் நன்றாக இருக்க வேண்டும். சுபர் பார்வை, சுபர் கூட்டணி, நீசம் மறைவு இல்லாமை போன்றவை எல்லாம் லாபஸ்தானம் வலுவடையும் இந்த இரண்டு ஸ்தானங்களும் வலுவுடன் இருந்து, வலுவான தசா புத்தி காலங்களில் ஈடுபட்டால் பங்கு மார்க்கெட்டில் ஈடுபட்டு வெற்றியடையலாம். லாபம் சம்பாதிக்கலாம்


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள