ரியல் எஸ்டேட் தொழில் யாருக்கு வெற்றியை தரும்?

ரியல் எஸ்டேட் தொழிலை பற்றி தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை நிலங்களை வாங்கி விற்பதும், வீடுகளை வாங்கி விற்பதும், இடங்களை வாங்கி அதில் கட்டடங்களை கட்டி வீடுகளை கட்டி விற்பதும் ஆகும்

ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்தவரை இரு வகையான வியாபாரங்கள் இருக்கின்றன. ஒன்று முதல் போட்டு செய்யும் தொழில். இன்னொன்று முதல் போடாமல் செய்யும் தொழில்.

முதல் போட்டும் செய்யும் தொழிலில் வியாபாரத்தில் உள்ளவர் முதலை போட்டு இடங்களை வாங்கி அதை கட்டிடங்களாக கட்டி லாபத்துக்கு விற்பனை செய்வதும் அல்லது சிறிது காலம் கழித்து லாபத்திற்கு காலி இடங்களை விற்பனை செய்வது.

இன்னொன்று முதல் எதுவும் போடாமல் இடங்களை விற்று கொடுப்பதற்கு கமிசன் பெற்று கொண்டு அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது.

ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்தவரை சமீப காலமாக மிகவும் பிரபல்யமாக இருக்கிறது. காரணம் பெருகி வரும் மக்கள் தொகை, இட பற்றாக்குறை இவற்றின் காரணமாக குடியிருக்கும் வீடு, வியாபாரம் செய்ய இடம் தேவை அதிகமாகி வருகிறது. அதனால் ரியல் எஸ்டேட் தொழில் சமீப காலமாக பிரபல்யமாகி வருகிறது.

ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் எல்லோரும் லாபம் சம்பாதிக்க முடியுமா?

லாபம் சம்பாதிக்கும் அமைப்பு அந்த தொழில் அவர் வெற்றியடையும் அமைப்பு அவருடைய ஜாதகத்தில் 
இருக்க வேண்டும். இருந்தால்தான் லாபம் சம்பாதிக்க முடியும், வெற்றியடைய முடியும்.  

ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுகிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் சகோதரகாருகன் நல்ல வலுவுடன் இருக்க வேண்டும். சாதகமான இடத்தில இருக்க வேண்டும். பகைவர்கள் பார்வை பெறாது நல்லவர்களுடைய சேர்க்கையில் இருக்க வேண்டும். இவற்றை தவிர வேறு சில அம்சங்களும் ஜாதகத்தில் இருந்தால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு அபரிதமான லாபம் மற்றும் வெற்றி பெறலாம். 


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள