பிற்பகுதி வாழ்க்கையில் சுகமான வாழ்க்கை யாருக்கு அமையும்?

ஒரு சிலரது வாழ்க்கையில் பார்த்தோம் என்றால் வாழ்க்கையின் முற்பகுதியில் அதாவது நடுத்தர வயது வரை பார்த்தோம் என்றால் கஷ்டத்திலேயே உலண்டு கொண்டு இருப்பார்கள். சிறு வயதில் படிக்கும் வரை கஷ்டம். படித்து முடித்தவுடன் திருமணம் ஆகி குடும்பம் என்று உண்டாகி அதனால் கஷ்டம். நடுத்தர வயது வரை கஷ்டத்திலேயே உழன்டு கொண்டு இருப்பார்கள். 

திடிரென்று பார்த்தால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் 
நிலைமையே மாறி பிற்கால வாழ்க்கையில் முற்கால வாழ்க்கையில் இழந்த அத்தனை சுகங்களையும் அதாவது வண்டி, வாகனம், வீடு,  காசு என்று அணைத்து சுகங்களையும் பிற்கால வாழ்க்கையில் கடைசி வரை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்

யாருக்கு இதுபோன்ற அமைப்பு உண்டாகும் என்றால் ஆயுள் காரகன் தொழில் காரகன் லக்னத்தில் ஆட்சியோ உச்சமோ பெற்று வலுவாக அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகருக்கு பிற்கால வாழ்க்கை சுகமாக அமையும் என்று கூறலாம். முற்காலத்தில் இழந்த சுகங்கள் அனைத்தையும் திரும்ப பெறுவார் என்று கூறலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள