வாழ்க்கையின் அணைத்து வசதிகளும் யாருக்கு கிடைக்கும்?

பொதுவாக இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் அணைத்து அம்சங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைபடுவார்கள் ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் அது நடக்குமா என்பது அவர் அவர்களின் பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்களின் அமைப்பை பொருத்ததாகும்.

ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல அம்சங்கள் என்பது நல்லதொரு வேலைவாய்ப்பு, நல்ல தொழில் நல்ல வருமானம், நல்ல நண்பர்கள்
மற்றும் வாழ்க்கையில் உள்ள பிற வசதி வாய்ப்புகளை கூறலாம்

இவை அனைத்தையும் பெறுவதற்கு ஒருவர் முயற்சி செய்ய வேண்டும் என்றாலும் கூட அவருடைய பிறந்த நேரத்தில் அமைந்த கிரகங்களின் அமைப்பு அவை இடம் பெற்றிருந்த இடம் இவற்றை வைத்தும் அமைகின்றன.ஏனென்றால் ஒரு மனிதனை ஆளுமை செய்வதே கிரகங்கள் தான். கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுதான் ஒவ்வொரு மனிதனின் செயல் சிந்தனைகள் அனைத்தும் அமைகின்றன.

அந்த விதத்தில் பார்க்கும்போது ஒருவருடைய ஜாதகத்தில் லாபாதியாக சனி இருந்து பகை நீசம் பெறாத இடமாக அமைந்து வலுவாக அமர்ந்திருந்தால்
அந்த ஜாதகருக்கு நல்லதொரு வேலைவாய்ப்பு, நல்ல தொழில் நல்ல வருமானம், நல்ல நண்பர்கள் மற்றும் வாழ்க்கையில் உள்ள பிற வசதிகள்  அமையும் என்று கூறப்படுகிறது. 

ஆனால் அதே லாபாதிபதி தன்னுடைய பார்வையால் அந்த ஜாதகரை உழைத்துத்தான் முன்னேற வைத்து இந்த பலன்களை அனுபவிக்க வைப்பார். 
சூதாட்டம், லாட்டரி, ரேஸ் போன்ற தவறான வழியில் லாபங்களை பெற லாப ஸ்தானாதிபதி சனி விட மாட்டார்.

சனியை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசான். தவறை உணர்த்தி மக்களை நல்வழி படுத்தும் கிரகம்.
  


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள