ஏற்றுமதி வியாபாரம் யாருக்கு வெற்றி லாபம் தரும்?

ஏற்றுமதி என்பதே ஒரு நாட்டின் வளம் செல்வம் அனைத்திற்குமே முக்கிய காரணம். ஏற்றுமதி மூலமாக கிடைக்கும் அந்நிய செலவாணி நாட்டை மட்டும் சுபிட்சமாக வைக்கவில்லை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த நபரையும் வாழ்க்கையின் உச்சத்தில் கொண்டு சென்று விடும்.

நம்முடைய நாட்டில் அரசாங்கமே சலுகை சலுகை மேல் அறிவித்து தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் ஒரே தொழில் ஏற்றுமதி தொழில் மட்டும்தான்.
மேலும் ஏற்றுமதி தொழிலை பற்றி அறிந்தவர்களும் அறியாதவர்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் பல விதமான தகவல்கள் நிறைய கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு அற்புதமான தொழிலை எல்லோரும் செய்து வெற்றியடைய
லாபம் அடைய முடியுமா?

ஜோதிட ரீதியாக சில அமைப்புகள் சரியாக இருந்தால் ஏற்றுமதி தொழிலை செய்து வாழ்வில் ஏற்றம் அடையலாம். ஒருவருக்கு ஏற்றுமதி தொழில் நல்ல ஆதாயம் தர வேண்டும் என்றால் அவர் பிறக்கும்போது ஜாதகத்தில் மனகாரகன் நல்ல நிலைமை பெற்று, நல்லவர்கள் பார்வை பெற்று, நல்லவர்கள் கூட்டணியில், நல்லவர்களுடைய வீட்டில் இருக்கவேண்டும்.

அப்படி தாய் காரகன் நல்ல படியாக அமைய பெற்ற ஜாதகர் ஏற்றுமதி தொழிலை தேர்ந்தெடுத்து நல்ல லாபமும் சம்பாதிக்கலாம் வெற்றியையும் அடையலாம்.  வாழ்க்கையின் அணைத்து வளங்களையும் அனுபவிக்கலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள