உங்களுக்கு அரசு வேலை கிடைக்க ஏன் தாமதம்?

தற்பொழுது அரசாங்க வேலைக்கு புதிதாக ஆள் எடுப்பதற்கு அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்க் காலத்தில் இன்னும் நிறைய வரலாம் லட்சகணக்கான பேர் ஆயிரக்கணக்கான இடங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலும் 1 காலி இடத்துக்கு 1300 பேர்  என்ற விகிதத்தில் விண்ணப்பிக்கின்றனர்.

என்னதான் அறிவாளியாக இருந்தாலும், பல பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்தாலும் பிறக்கும்போது அவர் அரசாங்க சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற அமைப்பு இருந்தால்தான் அவர் அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் அந்த வேலை அவருக்கு கிடைக்கும். 

என்னதான் நமக்கு திறமை இருந்தாலும் நமக்கு மீறிய சக்தி ஒன்று நமக்கு பின்னால் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த சக்திகள் நண்மை
செய்யும்போது இது போன்று தேர்வுகள் எழுதும்போது உதவியாக இருந்து தேர்வில் வெற்றி பெற வைத்து அரசாங்க வேலைகளை கிடைக்க செய்கிறது

அதற்காக ஒன்றுமே முயற்சி செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அந்த சக்திகளிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க முடியாது. முயற்சி என்றால் அந்த தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுதல், பயிற்சி எடுத்தல் போன்றவை. முயற்சியும், அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற அமைப்பும் ஜாதகத்தில் இருந்தால் கண்டிப்பாக அரசாங்க வேலை கிடைக்கும்.

இவற்றில் ஏதாவது ஒன்று இருந்து மற்றொன்று இல்லையென்றாலும் அரசாங்க வேலை கிடைப்பதில் தாமதம் அல்லது தடை உண்டாகலாம்

அரசாங்க வேலை கிடைப்பதர்க்குண்டான அமைப்புகளை தாமத படுத்துவதற்கு என்ற சில கிரகங்களின் அமைப்பு, கூட்டு, பார்வை சதி செய்யும். அவற்றை ஜாதகத்தின் வாயிலாக சரியாக கண்டு அறிந்து அதற்க்குண்டான வழிகளையும் செய்து முயற்சியும் செய்தோம் என்றால் நிச்சயம் அரசு வேலை கிடைப்பதர்க்குண்டான தாமதம் தடையை தகர்த்து விடலாம் 



ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள