உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்?

ராசிகள் மொத்தம் 12.   ஒவ்வொரு மனிதரும் இந்த 12 ராசிக்குள் அடக்கம்.

ஒவ்வொரு ராசி காரர்களின் ஆசைகள் விருப்பங்கள் வித்தியாசப்படும்.

உதாரனத்திற்க்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களை எடுத்து கொண்டீர்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உதாரனத்திற்க்கு சாப்பாட்டு விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள். ஒருவருக்கு இட்லி மிகவும் பிடிக்கும். ஒருவருக்கு இட்லி பிடிக்காது சப்பாத்திதான் பிடிக்கும். ஒருவருக்கு சாம்பார்தான் பிடிக்கும். ஒருவருக்கு சாம்பார் என்றால் பிடிக்காது. புளி  குழம்புதான் பிடிக்கும். கோழி என்றால் ஒருவருக்கு பிடிக்காது. ஆட்டு கறி பிடிக்கும். மீன் பிடிக்காது.  நண்டு பிடிக்கும். கத்தரிக்காய் பிடிக்காது. முருங்கை பிடிக்கும். வெண்டிக்காய் பிடிக்காது.

ஒருவருக்கு தொலை காட்சியில் வரும் குறிப்பிட்ட பாடகரின் பாடல்களை பிடிக்கும் அவர் நடித்த சினிமா படங்களை பிடிக்கும் ஒரு சிலருக்கு  அந்த நடிகரின் படத்தை பார்த்தாலோ பாட்டை கேட்டாலோ அய்யா சாமி ஆளை விடு என்று ஓடி விடுவார்கள்.

ஒருவருக்கு இன்ஜினியரிங் படிப்பு பிடிக்கும், ஒருவருக்கு இன்ஜினியரிங் படிப்பு என்றாலே கசக்கும் ஆனால் வணிக வியல் படிப்பு பிடிக்கும் (அதாவது
commerce போன்ற படிப்புகள்) ஒருவருக்கு  Computer  சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்கும், கணக்கு சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்காது. ஒருவருக்கு சட்டம் சம்பந்தப்பட்ட படிப்புகள் பிடிக்கும் மற்றொருவருக்கு சட்ட படிப்பு என்றாலே தலை தெறித்து ஓடுவார்கள்.  

அது ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்?

இதில் ஒன்றும் வியப்பில்லை. எல்லாம் அவர்கள் ஜாதக அமைப்பு தான். ஜாதகத்தில் அவர்கள் பிறந்த நேரத்தில் அமர்ந்த கிரகங்களின் அமைப்பு படிதான் எந்த விஷயத்தை எடுத்து கொண்டாலும் சரி அது சாப்பாட்டு விசயமாக இருந்தாலும் சரி, அது படிக்கும் விசயமாக இருந்தாலும் சரி, பொழுதை போக்கும் விசயமாக இருந்தாலும் சரி, அவர்கள்  அதில் மட்டும்தான் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் செய்யும் மட்டும் தொழில் மட்டும் விதி விலக்கல்ல. அவருக்கு விருப்பமான தொழிலை செய்யும்போது அவரையும் அறியாமல் உற்சாகமாக அந்த தொழிலை செய்வார். அந்த தொழில் உள்ள தொழில் நுணுக்கங்களை கண்டறிந்து அதில் வெற்றியும் அடைவார். 

ஒருவர் தான் செய்யும் தொழிலும் வெற்றி அடைவதற்கு அவர் ஜாதகத்தில் அமைந்த கிரகங்கள் தான் காரணம். கிரகங்களின் வலுவான அடிப்படையை வைத்து ஒருவர் தன்னுடைய தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் நிச்சயமாக தான் செய்யும் தொழில் வெற்றியடைவார். பணம் புகழ் அணைத்தையும் பெறுவார்.

இந்த விசயத்தை சிலர் தெரிந்து அந்த தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி அடைகின்றனர். சிலர் தெரிந்தும் தெரியாமலும் பிடிக்காத அல்லது அவர்களுக்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.

உங்களுக்கு எல்லாம் ஈசியாக புரிந்து கொள்வதற்கு அறிந்த ஒரு விஷயத்தை
சொல்லுகிறேன். தமிழ் சினிமா உலகில் superstar என்று சொல்லப்படும் திரு.ரஜினிகாந்த் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு பேருந்தில் கண்டக்டர் வேலை செய்து கொண்டு  இருந்தார். ஆனால் அவருக்கு கலை துறையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. 

அதை சரியாக உணர்ந்து அவரோ அல்லது மற்றவர்களால் தூண்டப்பட்டு தமிழகத்திற்கு வந்து நடிக்க தொடங்கினார். பல தோல்விகளையும் அவமானங்களையும் சகித்துக்கொண்டு படி படியாக முன்னேறி இன்று super star என்ற அந்தஸ்தில் இருக்கின்றார். 

அவர் பார்த்த தொழிலும் இன்று அவர் ஈடுபட்டு புகழ் பெற்று 
விளங்குகிற தொழிலுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவர் கண்டக்டர் ஆகவே இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழையும் வசதியையும் அடைந்திருப்பாரா?
நிச்சயமாக அடைந்திருக்க மாட்டார்.  
   
ஆனால் நிச்சயமாக அவருடைய ஜாதகத்தில் கலை துறையில் வெற்றி புகழ் பெறுவதற்கு உண்டான அமைப்பு இருக்கும். சரியான தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்தார் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். 

அதுபோல் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் எந்த தொழில் அவருக்கு வெற்றியை தரும் என்ற அமைப்பை கண்டுபிடித்து அதில் ஈடுபட்டார்கள்  
என்றால் நிச்சயமாக வெற்றி, புகழ், பணம் அனைத்தையும் பெறலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள