இன்று கல்யாண வயதை எதிர்நோக்கி இருக்கும் ஆண் பெண் பெரும்பாலனவர்களிடம் உள்ள மிக பெரிய மன குழப்பம் இதுதான்.
காரணம் யாருடைய வெளி தோற்றத்தையும் பழக்கங்களையும் வைத்து நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியவில்லை.
பார்க்கும் போதும் பழகும் போதும் பேசும் போதும் நல்லவர்களாக இருந்ததை நம்பி கல்யாணத்தையும் செய்துவிட்டு கஷ்டப்படும் எத்தனையோ ஆண்களையும் பெண்களையும் வாழ்க்கையில் நாம் நிறைய சந்திக்கிறோம்.
பெண்களை எடுத்துகொண்டோம் என்றால் காதல் வயப்பட்டு காதலர் பேச்சையும், செயலையும், குணத்தையும் அப்படியே நம்பி கல்யாணத்திற்கு பிறகு கணவனின் சுய ரூபம் வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன் அவன் தரும் கொடுமைகளில் இரவும் பகலும் அவஸ்தைப்பட்டு அவனை விட்டு விலகினால் போதும் என்ற நிலைமைக்கு வந்து விடுகின்றனர். அதனால்தான்
சமிப காலங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இருப்பதற்கு காரணம்.
இதே போன்றுதான் பெண்களின் வார்த்தையும் பேச்சையும் செயலையும் வெளிப்படையாக பார்த்து ஏமாந்து கல்யாணம் வரை சென்று கல்யாணத்திற்கு பிறகு அந்த பெண்ணின் உண்மையான சுயரூபம் தெரிந்து அவள் தரும்
கொடுமைகளை தாங்க முடியாமல் அவளிடமிருந்து விலகினால் போதும் என்று மனம் நொந்து பைத்தியம் பிடிக்காத குறைக்கு சென்று விடுகிறார்கள்.
இது போன்ற தவறுகள் பெரும்பாலும் ஆணோ பெண்ணோ தாங்களாகவே
தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ளும் போதுதான் நடக்கின்றது.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால் தானும் கஷ்டப்பட்டு அவர்களை பெற்ற பெற்றவர்களும் இவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
சரி ஒருவருடைய குணாதிசயத்தை ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?
ஒருவருடைய நாம் சுயமாக நேரடியாக ஒருவரை பார்த்து அவர் நல்லவரா கெட்டவரா என்பதை கணிப்பதை விட லக்கினத்தை வைத்து, லக்கினதிபதியின் இருப்பு நிலை போன்றவற்றை வைத்து அந்த ஆணோ பெண்ணோ நல்ல குணங்கள் உள்ளவரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள