கடன் தொல்லையில் இருந்து எப்படி மீள்வது?

விஞ்ஞானம் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே
வேகத்திற்கு பெரும்பாலான மக்களிடையே கடனும் வளர்ந்து கொண்டு
இருக்கிறது. கடன் தொல்லையில் மாட்டிகொண்டு வெளி வர முடியாமல்
திண்டாடிகொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன?
தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள். பொழுது போக்கு சாதனங்கள்,
ஆடை அணிகலன்கள், மொபைல் போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற பொருட்களின் புது புது வரவு மக்களை எப்படியாவது
வாங்கி விட வேண்டும் அதை அனுபவித்து விட வேண்டும் என்ற
 தூண்டிவிடும் ஆவல் ஆசை.

இவற்றையெல்லாம் விட வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவது. தங்களுடைய வருமானம் நிரந்தரமாக இருக்குமா அல்லது நம்மால் திருப்பி கட்டும் அளவிற்கு வருமானம் இருக்குமா என்பதையெல்லாம் யோசனை செய்யாமல் மற்றவர்கள் நம்மை பார்த்து பெருமை படவேண்டும் புகழ வேண்டும் என்று ஆசை பட்டு தகுதிக்கு மீறி கடன் வாங்கி வீட்டை கட்டுபவர்கள் நிறைய பேர்.
இருக்கும் நகைகளை விற்று, பல காலங்களாக சேமித்து வைத்திருந்த சேமிப்பையும் காலி செய்து வீட்டை கட்டி முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
முடிவில் என்னவாகும் மாதந்திர செலவிற்கே திண்டாட்டம் ஆகி
மேற்கொண்டும  கடன் வாங்கி, சமாளிக்க முடியாமல் வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

முடிவில் பார்த்தால் வீடும் இருக்காது, நகைகளும் இருக்காது, பல காலங்களாக சேமித்து வைத்திருந்த தொகையும் இருக்காது. எல்லாவற்றையும் இழந்து வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலை வரும். வாடகை வீட்டில் குடி இருந்தாலும் பரவாயில்லை,
ஆனால் வாடகைக்காக ஒரு பெரும் தொகையை மாத மாதம் செலவு பண்ண
வேண்டி வரும்.

இது போன்ற தகுதிக்கு மீறிய ஆசைகள் வருவதற்கும் ஒருவருடைய பிறந்த ஜாதக பலன் என்றும் கூறலாம். ஒரு சிலருக்கு கடனை ஏற்படுத்தி, அவஸ்தை பட செய்யும்
கிரகங்கள் மிகவும் வலுவாக கடன் ஸ்தானத்தில் அமர்ந்து விட்டாலோ,
கடனுக்குண்டான கிரகங்கள் கூட்டு சேர்ந்தாலோ, கடனுக்குண்டான கிரகங்கள் பார்வை பட்டாலோ கடன் தொல்லையில் அவஸ்தை பட வேண்டிய சூழ்நிலை வரும். அதுபோன்ற கிரகங்கள் ஜாதகருடைய சிந்தனையை தவறான வழிக்கு இட்டு சென்று
அவரை கடன் தொல்லையில் மாட்டிவிட செய்யும்.

சரி ஏற்கனவே தவறாக சிந்தித்து கடனில் மாட்டிகொண்டு தற்போது அந்த கடனில் விடுபடவும் தேவையில்லாத கடனில் மாட்டி கொள்ளாதவாறு தப்பிக்க ஜோதிடத்தில் வழியுண்டா?

தவறு செய்ய கிரகங்கள் வழி செய்யும்போது அந்த தவறிலிருந்து விடுபடவும் அதே கிரகங்களை சாந்தி செய்தால் விமோசனம் உண்டாகிறது.

நீங்களும் தேவையில்லாத கடனில் மாட்டிக்கொண்டு விடுபடமுடியாமல்
தவித்து கொண்டிருந்தால் ஜோதிட வாயிலாக தீர்வு கண்டு கடனிலிருந்து விடுபட்டு சந்தோசமாக வாழலாமே?


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள