கணவன் மனைவி இருவரும் ஒரு குடும்பத்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி செல்லும் புகை வண்டி ஓட்டுனர்கள் மற்றும் Guard போன்றவர்கள்.
இவர்கள் இருவருக்கும் ஒற்றுமை புரிந்துணர்வு இருந்தால்தான் அவர்களை நம்பி இருக்கும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் போய் சேர வேண்டிய இடங்களுக்கு பத்திரமாக போய் சேர முடியும்.
இன்னும் சொல்லப்போனால் விலை மதிப்பில்லாத ஆயிரகணக்கான பயணிகளின் உயிர்கள் அந்த புகை வண்டிஓட்டுநரிடமும் Guard கையில்தான்
இருக்கிறது.
ஒரு புகை வண்டியை இயக்கி செல்லும் ஓட்டுனர் மற்றும் Guard இருவருக்கும் உள்ள பொறுப்பை போன்று குடும்பத்தை நடத்தி செல்லும் கணவன் மனைவிக்கு உண்டு.
கணவன் மனைவி இருவரும் வாழ்க்கை எனும் புகைவண்டியை நடத்தி செல்லும் ஓட்டுனர் மற்றும் Guard போன்ற பொறுப்பான பொறுப்பில் உள்ளவர்கள்.
அவர்கள் இருவரும் வாழ்க்கை எனும் புகைவண்டியை பொறுப்பாக நடத்தி சென்றால் குடும்பத்தில் குழப்பங்கள் இன்றி சந்தோசமான மணவாழ்க்கையை காண முடியும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை, ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் மனப்பான்மை போன்ற நல்ல பண்புகள் இருக்கும். இந்த நல்ல பண்புகள் அவர்களை பார்த்து வளரும் குழந்தைகளிடதிலும் எதிர்பார்க்கலாம்.
குழந்தைகள் அப்பா அம்மாவை போன்று அப்படியே பிரதி பலிக்கும் கண்ணாடியை போன்றவர்கள். ஆம் கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் போது உங்கள் உருவத்தை தவிர வேறு உருவம் தெரியாது.
பெற்றோர்களாகிய உங்களை போன்றுதான் உங்கள் குழந்தைகள் குணத்திலும் பழக்கத்திலும் கண்ணாடியை போன்று பிரதிபலிப்பார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ பேர் வாழ்வில் கணவன் மனைவி இருவரிடத்தும் புரிந்துணர்வு இல்லாமல் ஒரு ஒப்புக்காக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
சரி இதுபோன்று இருப்பதற்கு காரணம் என்ன?
பிறந்த ஜாதகத்தில் பிறந்த நேரத்தில் சேரக்கூடாத சில கிரகங்களின் சேர்க்கையும் இதற்க்கு காரணமாக இருக்கலாம். இந்த கிரக சேர்க்கைகள் கணவன் மனைவியிரடத்து ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் செய்து விடும்.
சரி இதற்க்கு தீர்வு உண்டா?
சில முறையான எளிய வழிமுறைகளை செய்தால் கணவன் மனைவியரிடத்து இருக்கும் ஒற்றுமையின்மையை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத்தி குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலவசெய்யலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள