திருமணம் ஆன தம்பதியர்க்கு குழந்தை செல்வம் வேண்டும் என்ற
ஆவல் நிறைய இருக்கும். அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவர்களை
சேர்ந்த உறவினர்கள், அம்மா, அப்பா அனைவருக்குமே தங்கள் மகன் அல்லது மகள் விரைவில் கொஞ்சுவதற்கு ஒரு பேரனோ அல்லது
பேத்தியோ கொடுக்க மாட்டார்களா என்ற நியாயமான ஆசை இருக்கும்.
ஆனால் நடைமுறையில் நாம் திருமணமான தம்பதியிரடையே
திருமணமாகி வெகு நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாமல்
இருப்பதை பார்க்க முடிகிறது.
பொதுவாக உடல் அளவிலும் மனதளவிலும் கணவனும் மனைவியும் சந்தோசமாக இருந்தால்தான் குழந்தை பிறப்பு
தாமதமில்லாமல் ஏற்ப்படுகிறது.
உரிய நேரத்தில் குழந்தை பிறப்பதுர்க்குண்டான சூழ்நிலைகளை கணவன் மாணவன்
இருவரும் உடல் அளவிலும் மனதளவிலும் பெற்று சந்தோசமான தாம்பத்ய உறவு ஏற்பட்டு அதன் மூலமாக குழந்தை பிறக்கும் சூழ்நிலை உருவாகிறது.
தம்பதியர் இருவரும் உடல் அளவிலும் மனதளவிலும் சந்தோசமாக இருப்பதற்கு அவர்கள் பிறந்த நேரத்தில் அமைந்த
கிரகங்களும் உதவி செய்கின்றன.
கணவன் மனைவி இருவருக்கும் புத்திர பாக்கியதிர்க்குரிய கிரகம் ஜாதகத்தில் நல்ல இடத்தில்
அமர்ந்து, நல்ல கிரக சேர்க்கை பெற்று, நல்ல கிரக பார்வை பெற்று இருந்தால் குழந்தை
பாக்கியம் தாமதம் இல்லாமல் உரிய நேரத்தில், உரிய காலத்தில் கிடைக்கும்.
கணவன் மனைவி யாரவது ஒருவருக்கு புத்திர பாக்கியத்திற்கு உரிய கிரகம் கெட்ட இடத்தில அமர்ந்து, கெட்ட கிரக பார்வை பெற்று,
கெட்ட கிரக சேர்க்கை பெற்றால் குழந்தை
பிறப்பு தோஷம் உண்டாகிறது.
அதே போன்று கணவன் மனைவி இருவருக்கும் அல்லது
யாரவது ஒருவருக்கு ஆறு, எட்டு, பனிரெண்டுக்குரிய கிரகங்கள்
புத்திர ஸ்தானத்தில்
இருந்தாலும் குழந்தை பிறப்பு தோஷம் உண்டாகிறது.
குழந்தை பிறப்பு தோஷம் இருந்தால் குழந்தை பிறப்பே உண்டாகாதா? நிச்சயமாக அப்படி இல்லை.
குழந்தை பிறப்பு தோஷம் உண்டாக காரணமாக இருக்கும் நிலைகளை ஜாதகத்தின் வாயிலாக அறிந்து,
அதற்க்குண்டான சில எளிய வழி முறைகளை கையாண்டால்
கிரக சாந்தி ஏற்படுகிறது.
கிரக சாந்தி ஏற்படுவதின் மூலமாக கணவன் மனைவி
இருவருக்கும் குழந்தை பிறப்பதர்க்குண்டான சாதகமான
சூழ்நிலைகளை மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்டு
குழந்தை பிறப்பு உண்டாகிறது.
இது ஒரு விஞ்ஞான பூர்வமான உண்மையும் ஆகும். ஆனால்
மருத்துவ வசதி போன்ற வசதிகள் இல்லாத
அந்த நாளிலேயே தெரிந்து வைத்து ஜாதகத்தின்
வாயிலாக கிரக பரிகாரங்கள் செய்து குழந்தை பிறப்பை ஏற்படுத்தி
கொண்டுள்ளனர்.
உங்களுக்கும் இது போன்று திருமணமாகி குழந்தை இல்லாமல்
இருந்தால் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. சில கிரக சாந்திகள் செய்து குழந்தை பிறப்பு தோசத்தை தவிர்க்கலாம்.
இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
