நவரத்தினங்களை மக்கள் அழகுக்காகவும் ஆடம்பரதிர்க்காகவும் மோதிரம், நெக்லஸ், தோடு, மூக்குத்தி, போன்ற நகைகளுடன் இணைத்து
அணிகின்றனர்.
நவரத்தினங்கள் என்பது ஒன்பது வகையான இயற்கை சக்தி கலந்த
கற்கள் ஆகும்.
அவை யாவன என்றால் முத்து, பவளம், வைரம், வைடூரியம், மரகதம்,
நீலம், கோமேதகம்,
புஷ்பராகம், மாணிக்கம் போன்ற ஒன்பது வகையான கற்கள் ஆகும்.
ஒன்பது வகையான நவரத்தின கற்களும் பூமியில் விளையக்கூடியவை. பூமியில் விளையும்போது பலவித
தாக்கங்களுக்கு உட்பட்டு விளைகின்றன. அதாவது காற்று, மழை, நீர், நெருப்பு போன்ற இயற்க்கை தாக்கங்களுக்கு உட்பட்டு விளைகின்றன. அதுமட்டும் அல்லது வானவெளியில் சுற்றிகொண்டிருக்கும்
கிரகங்களின் தாக்கத்திற்கும் நவரத்தின கற்கள் உட்படுகின்றன.
இதுபோன்று இயற்கை சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய நவரத்தினங்களை மனிதர்கள் அணியும் போது கிரகங்களினால் உண்டாகும்
கெடுபலன்கள் குறைந்து
வாழ்க்கையின் அணைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
ஆனால் பொருத்தமான நவரத்தினங்களை பொருத்தமானவர்கள்
அணிந்தால் தான் மேற்படி வாழ்க்கையின் அணைத்து வசதிகளையும் பெற்று சந்தோசமாக வாழ முடியும்.
அதை விடுத்தது பிறந்த தேதியை வைத்து அல்லது புத்தகங்கள் மூலம்
தாமாகவே ஒரு நவரத்தின கற்களை தேர்ந்தெடுத்து அணிந்தால் நன்மைக்கு பதில் எதிர் மறையான விளைவுகள்தான் ஏற்படும்.
அப்படியென்றால் பொருத்தமான நவரத்தின கற்களை எப்படி தேர்ந்தெடுப்பது?
ஒருவருடைய பிறந்த நேரத்தையும், தேதியையும் வைத்து அவர் பிறக்கும்
போது வலுவான கிரகங்கள் என்ன, வலுவில்லாத கிரகங்கள் என்ன எந்த கிரகங்கள் அவருக்கு நன்மை புரியும் என்பதை அறிந்து
நவரத்தின கற்களை தேர்ந்தெடுத்து அணிந்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு நன்மை பெறலாம்.
மேலும் நவரத்தின கற்களை எந்த நேரத்தில் எந்த தேதியிலிருந்து அணிந்தால் நன்மை பயக்கும் என்பதை அறிந்து அதன் பிரகாரம் நவரத்தின
கற்களை அணிந்தால் நன்மைகள் விளையும்.
இதை விடுத்தது பிறந்த தேதியை மட்டும் அடிப்படையாக வைத்து, புத்தகங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து தாமாகவே நவரத்தின கற்களை தேர்ந்தெடுத்து அணிந்தால் நன்மை புரிவதற்கு பதிலாக தீமைதான் நடக்கும்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள