உங்களுடைய குல தெய்வம் யாரென்று எப்படி தெரிந்துகொள்வது?

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.

குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை
செய்தாலும் அதில் பலனில்லை.

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது.

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன்
அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின்
அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும்
சுகமாக வாழ்வார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அவர்களுடைய குல தெய்வம் யாரென்று தெரியுமா?

ஒரு சிலருக்கு குல தெய்வம் யாரென்று தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
அதற்க்கு காரணம் சொந்தங்களை விட்டு ஊர் விட்டு ஊர் வந்து வேறு இடங்களில் வசிப்பது அல்லது அவர்களுடைய முன்னோர்கள் குல தெய்வம் யாரென்ற விபரங்களை பின்னால் வரும் சந்ததியருக்கு தெரியபடுத்தாமல் இருந்ததின் விளைவாக இருக்கும்.

அது போன்று இருப்பவர்களுக்கு குல தெய்வம் யாரென்று எப்படி
தெரிந்து கொள்வது? அதற்க்கு வழி இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில்
சில கிரகங்களின் அடிப்படையிலும் பார்வை விழும் கிரகங்களின் அடிப்படையிலும் லக்கினத்தின் அடிப்படையிலும், சந்திரனின் அடிப்படையிலும் குல தெய்வம் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு இதுவரையில் குல தெய்வம் யாரென்று
தெரியாமல் இருந்தால் அதை தெரிந்து கொண்டு குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றி வாழ்க்கையின் அணைத்து
வளங்களையும் இப்போது பெறலாமே?


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள