உங்களுடைய திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமா?

உங்களுடைய திருமணம் காதல் திருமணமா அல்லது உங்களுடைய பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்து செய்யும் திருமணமா?

இந்த கவலை இன்று பெரும்பாலான பருவ வயது பையன்கள் மற்றும் பெண்களிடத்து உள்ள
மிகப்பெரிய கவலையாகும்.

ஏனென்றால் ஆண்கள் பெண்களுடைய படிக்கும் எண்ணிக்கை, 
ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழ்நிலை, ஒரே நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலை, இன்டர்நெட், தொலைக்காட்சி, சினிமா 
இவைகளின் தாக்கம் இவை அனைத்தும் இன்றைய பருவ வயது ஆண்கள் மற்றும் பெண்களிடத்து காதல் என்ற தாக்கத்தை அதிகமாக்கி இருக்கிறது. 

அதனால் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பருவ வயது ஆண்களுடைய பெண்களுடையே சந்தேகமே 
அவர்களுடைய காதல்
வெற்றி அடையுமா,  திருமணம் வரை செல்லுமா அல்லது பாதியில் நின்று விடுமா, பெற்றோர்கள் காதலை ஏற்று கொண்டு திருமணம் 
செய்து வைப்பார்களா, 
அல்லது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்வதா 
அப்படியே எதிர்த்து திருமணம் செய்தாலும் கடைசி வரை அந்த திருமண வாழ்க்கை நீடித்து நிற்குமா 
போன்ற பல கவலைகளில் குழம்பி இருக்கிறார்கள்.

பொதுவாக காதல் கல்யாணம் என்பது ஒருவருடைய 
வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரவேண்டும் என்றாலும் அல்லது நீடித்து நிற்க வேண்டும் என்றாலும் ஜாதகத்தில் கிரகங்களுடைய
நல்ல அமைப்பு, நல்ல சேர்க்கை, நல்ல பார்வை வேண்டும். 

காதலுக்குரிய கிரகங்கள் நல்ல கட்டத்தில் அமர்ந்து, நல்ல கிரக சேர்க்கையுடன் இருந்து, நல்ல கிரக பார்வையுடன் இருந்தால் அந்த ஜாதகருடைய காதல் கல்யாணம் வரை சென்று, கல்யாணத்திற்கு   பிறகும் நல்லொதொரு மகிழ்சிகரமான 
வாழ்க்கையாக இருக்கும். 

அதைவிடுத்து காதலுக்குரிய கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல கிரக சேர்க்கை இல்லாமல், நல்ல கிரக பார்வை இல்லாமல் இருந்து திருமணம் நடை பெற்றால் அந்த திருமணம் நீடித்து நிற்காது பிறகு விவாகரத்து வரை செல்லும். 

அப்படியே ஒருவர் காதல் திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் 
என்றால் ஜாதகத்தை ஆராய்ந்து தடைகளை நீக்குவதர்க்குண்டான
வழிபாட்டு முறைகளை மேற்கொண்டால் அந்த காதல் திருமணம்
கடைசிவரை நீடித்து நிற்கும் திருமணமாக அமையும். 

இது எப்படி என்றால் நோய்க்கு மருந்து சாப்பிட்டு வியாதியை 
குணப்படுத்துவது போலாகும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள