நல்ல குணாதிசயம் உள்ள மனைவியை எப்படி தேர்ந்தெடுப்பது?

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்
என்பதை திருமணதிற்கு முன்பே தெரிந்து கொள்வதில்
நிச்சயமாக ஆவல் இருக்கும்.

ஏனென்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகும்
பெண் முதலில் உங்களை அனுசரித்து செல்ல வேண்டும், உங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒத்து செல்ல வேண்டும்.

இது போன்ற குணாதிசயங்களுடன் இருந்தால் தான்
திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் உங்களுடைய எதிர்கால சந்ததியர்கள் நல்லபடியாக அமைவர்.

சரி  திருமணத்திற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும்
மனைவி உங்களுடன் வாழ்க்கையில் அனுசரித்து செல்வாரா?
அல்லது சண்டை கோழியாக இருப்பாரா
என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

நல்லதொரு குணாதிசயங்களுடன் உள்ள பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?

உங்களுடைய குணாதிசயங்களுடன் ஒத்துவராத பெண்ணை
உங்களுடைய திருமண வாழ்க்கைக்கு எப்படி தவிர்ப்பது?

இதற்கெல்லாம் வழி இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது.

திருமண பொருத்தம், ஜாதக பொருத்தம் என்ற அந்த வழியைத்தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக கடை பிடித்து வந்திருக்கிறார்கள். அந்த வழியை வைத்துதான்
திருமணமும் நடந்திருக்கிறது.

அதுபோன்று முறையாக செய்த திருமணத்தின் அடிப்படையில்தான் அந்த திருமணங்கள்
60 வருடம்,  80 வருடம் என நீடித்து சாகும் வரையில் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர் இருந்துள்ளனர். 

60  வருடம் முடித்தவுடன் 60 ஆம் கல்யாணம், 80௦ வருடம் முடிந்தவுடன்
80௦ ஆம் கல்யாணம் என கொண்டாடி மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பார். 

ஆம் ஜாதக பொருத்தம் வாயிலாக தனக்கு வரப்போகும் மனைவி நீடித்த திருமண வாழ்க்கைக்கு ஒத்து வருவாரா? 
மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு லாயக்கானவரா என்பதை ஜாதக பொருத்தத்தின் வாயிலாக தெரிந்துகொண்டு அது போன்ற பெண்ணைத்தான் திருமணதிற்கு தேர்ந்தெடுப்பார்கள். 

மனிதர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய கிரகங்கள் முக்கிய காரணாமாகும்.
அதனால்தான் சில காலங்கள் முன்பு வரை விவாகரத்து போன்ற பேச்சுக்கே அதிகமான வைப்பு இருக்காது. 

சரி இப்பொழுது உங்களுடைய குணாதிசயங்களுக்கு
ஏற்ற பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது? 

உங்களுக்கு சந்தோசமான மணவாழ்க்கையை தரக்கூடிய
பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது? 

நீடித்து நிற்கக்கூடிய உறவினை ஏற்படுத்திகொடுக்கும்
பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம்  இடத்து
அதிபதி நல்லதொரு இடத்தில அமர்ந்து, நல்ல கிரகங்களுடன் சேர்ந்து,
நல்ல கிரகங்களுடைய பார்வையை பெற்றிருந்தாலும் நல்ல 
குணாதிசயம் உள்ள மனைவி அமைவார். 

அதேபோன்று களத்திரகாரனும் பகை நீசம் பெறாமல் இருந்தாலும் 
நல்ல குணாதிசயம் உள்ள மனைவி ஒருவருக்கு அமைவார்.     

திருமண பொருத்தம் அல்லது ஜாதக பொருத்தம் என்ற முறையின் மூலம் நல்ல குணாதிசயம் உள்ள பெண்ணை தேர்ந்தெடுத்து, பல காலம் நீடித்து நிற்கக்கூடிய மகிழ்சிகரமான வாழ்க்கையை ஏற்படுத்தி சந்தோசமாக வாழலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள