திருமண பொருத்தமும் கிரக அமைப்புகளும்

எந்த ஒரு ஜாதகத்திலும் இரண்டாம் இடத்து அதிபதியும், எழாம் இடத்து அதிபதியும் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து, நல்ல கிரகங்களின் பார்வை பெற்று, நல்ல கிரக சேர்க்கை பெற்றால் அந்த ஜாதகருக்கு நல்லதொரு நீடித்து நிற்கும் திருமண வாழ்க்கை அமையும் வாய்ப்பு  உண்டு. 

அதேபோன்று களத்திரகாரகனும் பகை நீசம் பெறாமல், நட்பு கூடி, சுப பார்வை பெற்றாலும் அந்த ஜாதகருக்கு நல்லதொரு நீடித்து நிற்கும் திருமண வாழ்க்கை அமையும் வைப்பு உண்டு.   


நல்லதொரு இல்வாழ்க்கை அமையவேண்டி சில கட்டங்களில் நல்ல கிரகங்கள் அமர்வதும் அல்லது அந்த
கட்டங்களை நல்ல கிரகங்கள் பார்ப்பதும் அவசியமாகிறது.

அப்படி நல்ல கிரகங்கள் அமர்ந்தால்தான் அல்லது பார்வை 
கிடைத்தால்தான் அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும்.





அதுபோன்ற அமைப்புடைய 
ஜாதகங்களுக்கு பொருத்தமான அதே போன்ற அமைப்புடைய நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை உள்ள ஜாதகங்களை தேர்ந்தெடுத்து மணமுடித்தால் அந்த 
திருமணம் நீடித்து நிற்கும் திருமணமாக அமையும்.

எனவே பொருத்தமான ஜாதகங்களை தேர்ந்தெடுத்து அதற்க்கு தகுந்தாற்போல் ஜாதகங்களை பொருத்தினால் நிச்சயமாக
எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நீடித்து நிற்கும்
திருமணம் நடக்கும்.


இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)