திருமணத்தில் ஆயுள் ஜாதக பொருத்தமும் ஆயுள் பொருத்தமும்

ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்யப்போகும் முன்பு
அந்த பெண்ணுக்கு திருமணம் செய்யப்போகும் ஆணினுடைய
ஆயுள் ஜாதகத்தில் வலுவாக இருக்கவேண்டும்.

அதே போன்று ஒரு ஆணுக்கு திருமணம் செய்யப்போகும் முன்பு
அந்த ஆணுக்கு திருமணம் செய்யப்போகும் பெண்ணுடைய
ஆயுள் ஜாதகத்தில் வலுவாக இருக்கவேண்டும்.






ஒரு ஜாதகத்தில் எட்டாம் இடது அதிபதி பகை நீசம் பெறாமல்,
நல்லோர்கள் சேர்க்கையுடன் இருந்து, சுபக்கிரக பார்வை பெற்றாலும் 
நீண்ட ஆயுள் உண்டு.

அதே போன்று ஆயுள் காரகனான சனியும் பகை நீசம் பெறாமல், நட்பு கிரகங்களுடன் கூடி, நட்பு ஸ்தானத்தில் 
இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. 

எட்டாம் அதிபதியோ சனி கிரகமோ  மறையவும் கூடாது.

ஆயுள் வலுவில்லாத ஒரு ஆணினுடைய ஜாதகத்தை ஆயுள் 
வலுவில்லாத  ஒரு பெண்ணின் ஜாதகத்துடன் பொருத்தி  
திருமணம் செய்து வைத்தால் கல்யாணம் ஆனாலும்
அந்தப்பெண் இளம் வயதிலேயே விதவையாகி விடுவாள்.

ஆயுள் வலுவில்லாத ஒரு பெண்ணினுடைய
ஜாதகத்தை ஆயுள் வலுவில்லாத ஒரு ஆணின் ஜாதகத்துடன்
பொருத்தி திருமணம் செய்து வைத்தால் கல்யாணம் ஆனாலும்
அந்த ஆண் இளம் வயதிலேயே தன்னுடைய மனைவியை
இழந்து விடுவார். இவையெல்லாம் ஜோதிட விதி என்று சொல்லப்படுகிறது.

சரி இது போன்ற ஆயுள் வலுவில்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண பாக்கியம் 
என்பதே கிடையாதா?

இவர்களுக்கும் திருமண பாக்கியம் உண்டு. 
ஆயுள் வலுவில்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்தமான ஜாதகத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் 
திருமணம் செய்து வைப்பதற்கும் அவர்களுடைய திருமண
வாழ்க்கை சந்தோசமான நீடித்து நிற்கும் திருமண
வாழ்க்கையாக அமைவதற்கும் ஜாதகத்தில் வழி உண்டு.


இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)