திருமண பொருத்ததில் ரஜ்ஜு பொருத்தத்தின் முக்கியத்துவம்


திருமண பொருத்தம் பார்க்கும்போது கல்யாணம் ஆகப்போகும் பையனுக்கோ 
அல்லது பெண்ணுக்கோ ரஜ்ஜு பொருத்தம் என்பது ஒரு 
முக்கிய பொருத்தம் ஆகும்.

இந்த பொருத்தத்தை மாங்கல்ய  பொருத்தம் என்றும் கூறுவர்.  
திருமண பொருத்தம் பார்க்கும்போது இந்த பொருத்தம் மிகவும் முக்கியமான பொருத்தமாகும்.

மாங்கல்ய பொருத்தம் இருந்தால்தான் அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாள் என்று பெரியவர்கள் 
வாழ்த்துவதற்கு ஏற்ப  அவளுடைய திருமண வாழ்க்கை இருக்கும்.

இந்த பொருத்தம் இல்லையென்றால் கணவர் மனைவியிடையே 
ஒற்றுமைக்குறைவும், குழந்தை பிறவாமை தோஷமும், நோய் நொடி தோஷமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

மாங்கல்ய பொருத்தமே இல்லாத ஒரு பெண்ணை ஒரு ஆடவருக்கு
மணமுடித்து வைக்கும்போது அந்த பெண் இள வயதிலேயே விதவையாகி
பல வித இன்னல்களுக்கு ஆளாகிறாள்.

அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட ஆடவருடைய ஜாதகத்தை மட்டும்
வைத்து ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது என்று முடிவு எடுக்ககூடாது.
     
வேறு ஒரு ஆடவருடைய ஜாதகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது
மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகி அந்த பெண்ணுக்கு நீடித்து நிற்கும் திருமண வாழ்க்கையும் அமையும்.


இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)