எந்த தொழில் செய்தால் வெற்றியடைய முடியும்?

ஒவ்வொருவரும் தொழில் செய்வதின் முக்கிய நோக்கமே தொழில் செய்து அதில் லாபம் ஈட்டுவதே ஆகும்.

ஆனால் சிலர் பார்த்தீர்கள் என்றால் அவர்களுக்கு பொருத்தமே இல்லாத தொழிலை செய்து கொண்டு இருப்பார்கள். பொருத்தமே இல்லாத தொழில் என்றால் இருக்கும் பணத்தை எல்லாம் தொழிலில் போட்டு அதில் எந்த வித லாபமும் இல்லாமல் கிணற்றுக்குள் போட்ட கல் போல போட்ட பணம் எல்லாம் போன இடம் தெரியாமல் இடிந்து பொய் உட்கார்ந்து இருப்பார்கள்.

இன்னும் சிலர் போட்ட முதலும் போய், மேற்கொண்டு கடனையும் வாங்கி அந்த கடனும் தொழிலில் மூழ்கி போய், மேற்கொண்டு வட்டி சுமையும் ஏறி, நிறுவனத்தையே மூடிவிட்டு கடன் காரர்களுக்கு பயந்து போய் ஊரை விட்டே ஓடி போகலாமா என்ற நிலை.     

எல்லோருக்கும் எல்லா தொழிலுமே சரியாக வராது. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.

நன்றாக ஓடி கொண்டு இருக்கும் ஓட்டல் கடை வைத்திருப்பவர் மேற்கொண்டு லாபம் கிடைத்தால் இருக்கும் கடையைத்தான் விரிவு படுத்தி 
வியாபாரத்தை பெருக்குவாறே தவிர, அதிக லாபம் கிடைத்தவுடன் துணி கடை ஆரம்பிக்க மாட்டார்.

அதே போன்று ஒரு ஜவுளி கடை வைத்து அதில் நல்ல லாபம் கிடைத்தவுடன்
மேற்கொண்டு அந்த ஜவுளி கடையைத்தான் விரிவு படுத்துவாரே தவிர, சம்பந்தமே இல்லாமல் ஒரு ஓட்டல் கடையை புதிதாக திறக்க மாட்டார்.

நீங்கள் நினைக்கலாம் அம்பானி போன்றவர்கள் எல்லாம் பல வியாபாரம் செய்கிறார்களே அது எப்படி என்று?

பல வியாபாரம் செய்தாலும் அம்பானிக்கு அத்தனையும் பரிட்சயம் என்று சொல்லமுடியாது. யாரையாவது நம்பித்தான் ஒவ்வொரு வியாபாரத்தின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால் அவர் காட்டுவதுதான் லாபம் அவர் சொல்வதுதான் நஷ்டம். இன்னொருவரிடம் வியாபார பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக தூங்க முடியுமா?
சரி, போ வந்த வரைக்கும் லாபம் என்று ஆறுதல் அடைந்துவிட்டு வேண்டுமானால் தூங்கலாம்.

அதனால் கூடியமட்டும் நமக்கு என்ன தொழில் பரிட்சயம் ஆக இருக்கிறதோ அதை செய்தோம் என்றால் நல்லதொரு லாபம் கிடைக்கும் என்று நம்பலாம்.

பொதுவாக ஒருவருக்கு ஒரு தொழில் பரிட்சயம் என்றால் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ அந்த தொழிலில் ஈடுபாடு இருக்கும். ஒரு தொழிலில் ஒருவருக்கு நல்ல ஈடுபாடு இருக்கும்போது அந்த தொழிலை மிகவும் ஆர்வத்துடன் செய்வார். ஆர்வத்துடன் ஒரு தொழில் செய்யும்போது புது  புது யுக்திகளை புகுத்தி நல்ல லாபங்களை அடைவார்.

ஒருவர் ஒரு தொழிலை ஆர்வத்துடன் செய்கிறார் என்றால் அது அவருடைய
உடலுடன் ஐக்கியமான விஷயம். ஒரு விசயம் அது தொழிலாகட்டும் அல்லது
விளையாட்டு ஆகட்டும் ஒருவருடைய உடலுடன் ஐக்கியம் ஆகும் போது அதில்வெற்றிகளை குவிக்க முடியும்.

விளையாட்டு வீரரை தொழில் செய்ய சொன்னால் அதில் அவர் சிறப்பாக செய்வார் என்று கூற முடியாது. விளையாட்டில் வேண்டுமானால் அவர் சாதனை புரியலாம். விளையாட்டு சார்ந்த தொழிலில் வேண்டுமானால் அவர்
பணம் ஈட்டலாம். வேறு எந்த தொழிலிலும் அவரால் சாதனை புரிய முடியாது.

அதே போன்று ஓட்டல் தொழில் செய்யும் ஒருவர் விளையாட்டை வேண்டுமானால் ரசிக்கலாம் ஆனால் அவரால் ஒரு புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஆக  முடியும் என்பது சற்று சந்தேகம்தான்.

எனவே ஒவ்வொரு மனிதர்களுடைய ஆசைகள், ஆர்வம், ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்பட்டும்.

அதுபோன்றுதான் ஒருவருக்கு நல்ல லாபத்தை தரும் தொழில் மற்றொருவருக்கு அதே தொழில் லாபத்தை தராது. காரணம் லாபம் ஈட்டும்
தொழிலை செய்பவர் அவருக்கு ஏற்ற தொழிலை தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுத்து செய்யலாம்.

ஆனால் நஷ்டத்தை ஈட்டும் தொழிலை செய்யும் ஒருவர் அவருக்கு ஆர்வம்
இல்லாத அல்லது பொருத்தம் இல்லாத தொழிலை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டு இருப்பார்.

ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன காரணம்?

மனிதர்களுடைய ஆசைகளும், ஆர்வங்களும் அவர் அவர் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அதைதான் ஒவ்வொருவருடைய ஜாதக கட்டங்களும் தீர்மானிக்கின்றன.

ஒருவருக்கு காரம் பிடிக்கும். ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும். ஒருவருக்கு புளிப்பு பிடிக்கும். ஒருவருக்கு கிரிகெட் விளையாட்டு பிடிக்கும். ஒருவருக்கு football பிடிக்கும். ஒருவருக்கு ஹாக்கி பிடிக்கும். ஒருவர் doctor படிக்கவேண்டும் என்று விரும்புவார். ஒருவர் IAS  ஆக வேண்டும் என்பார். ஒருவர் ஓட்டல் அதிபர் ஆக  வேண்டும் என்பார். ஒருவர் நகை கடை அதிபர் ஆக வேண்டும் என்பார்.

மனிதர்களுக்குள் ஒவ்வொருவரிடமும் ஏன் இத்தனை விருப்பம்? காரணம் ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அமைந்த வித்தியாசமான கிரக நிலைகள் தான் காரணம். கிரகங்கள்தான் மனித வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் அதாவது தொழில், வேலை, வியாபாரம் மற்றும் பல விசயங்களில்  வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

எனவே ஒருவர் ஒரு தொழில் செய்து வெற்றியடைய வேண்டும் என்றால் முதலில் அவருக்கு பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து  செய்ய வேண்டும். இதற்க்கு அவர் பிறந்த போது அமைந்த கிரகங்களின் நிலையை கொண்டு அந்த கிரகங்களின் இருப்பிடம், கூட்டணி, பார்வை போன்றவற்றை
ஆராய்ந்து அதற்க்கு தகுந்த தொழிலை தேர்ந்தெடுத்து   செய்தால் நிச்சயமாக
நல்ல லாபம் ஈட்டலாம், வெற்றியடைய முடியும்.        

   
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள