மகிழ்ச்சியான கல்யாண வாழ்க்கை எல்லோருக்கும் அமையாமல் போவதற்கு உண்டான காரணம் என்ன?

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது கணவன் மனைவி என்ற இரு வாழ்க்கை சக்கரங்களும் சரியாக பூட்டபட்டிருந்தால் மட்டுமே ஒட்டி செல்லும் வாழ்க்கை எனும் வண்டி தடம் புரளாமல் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை எனும் வண்டி பாதி வழியில் கவிழ்ந்து வண்டியும் நாசமாகி வண்டியும் பயணம் செய்பவர்களும் நாசமாகி விடுவார்கள்.

ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அந்த பொருளை பற்றிய தரம், விலை, மதிப்பு இவற்றை பற்றியெல்லாம் நன்கு தெரிந்ததற்கு பின்பு தான் அந்த பொருளை வாங்கலாமா வாங்கவேண்டாமா என்று முடிவு செய்கிறோம். உதாரனத்திற்க்கு இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகியுள்ள நிலையில் அந்த பொருளை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்த பின்புதான் அந்த பொருளை வாங்க சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு சென்று பொருளை வாங்குகிறோம்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையாமல் போவதற்கு 50 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையும் இப்போதுள்ள நிலைமையும் என்ன?

50 வருடங்களுக்கு முன்பு நமது நாட்டில் நடந்த திருமண தம்பதியர் இன்று வரை ஒற்றுமையாக வாழ்ந்து 80 வயது கல்யாணம் நடத்தி இன்றும் ஒற்றுமையாக இருப்பவர்கள் எத்தனையோ குடும்பத்தில் இருக்கின்றனர்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

ஆனால் இன்று நடப்பது என்ன? வெளி கவர்ச்சி வெளி தோற்றத்தில் பொய் வார்த்தைகளில் மயங்கி பெரியர்வகளின் சொல்லையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டு திருமணம் ஆன சில மாதங்களில், சில வருடங்களுக்காக அதுவும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் திருமண வாழ்க்கை முறிந்து விவாக ரத்து வரை சென்று விடுகிறது.

நிச்சயமாக எந்த ஒரு தாய் தகப்பனும் தங்களது பிள்ளையை பாலும் கிணற்றில் கொண்டு தள்ள மாட்டார்கள். ஆனால் இன்றைய பருவ வயது ஆணும் பெண்ணும் தங்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பொறுத்தவரை தங்களது பெற்றோர்களை நம்புவதில்லை. அதனால்தான்
இன்றைய திருமணங்களில் விரைவாக விவாகரத்து வரை சென்று விடுகிறது.

சரி அந்த காலத்தில் திருமணம் செய்தவர்களிடத்தும் இந்த காலத்தில் திருமணம் செய்தவர்களிடத்தும் திருமண வாழ்க்கை முறிவு வித்தியாசம் ஏன்?

அந்த காலத்தில் திருமணம் செய்வதற்கு முன்பு தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கணவன் அல்லது மனைவி வரவேண்டும் என்ற உரிமையை முழுமையாக தங்கள் கைவசம் வைத்து கொண்டு இருந்தனர். அதற்க்கு அவர்கள் முதலில் நம்பியது தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை மட்டும்தான்.  பெண்ணின் ஜாதகத்தையும் பையனுடைய ஜாதகத்தையும் ஒத்து பார்த்து பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த திருமணத்தை நடத்துவற்கு சம்மதிப்பார்கள்.

பொருத்தம் ஜாதகத்தின் இதர அம்சங்களையும் கிரக நிலைகளையும் பார்த்து
நல்லதொரு வாழ்க்கை துணையினை தங்கள் பிள்ளைகளுக்கு அமைத்து கொடுத்தனர். பெரும்பாலான கல்யாணங்கள் நீண்ட நெடு காலம் நீடித்து நிற்கும் மணவாழ்க்கையாக அமைந்தது. இன்றும் அது போன்ற தம்பதியர்கள் சந்தோசமாக திருமண வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

பெற்றவர்கள் அந்த பொறுப்பினை தங்கள் வசம் எடுத்து கொண்டனர். பெரும்பாலான பெற்றோர்களும் தங்களுக்குண்டான கடமையை செவ்வனே செய்து தங்களது பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொடுத்தனர்.


 பெண்ணோ பையனோ ஒருவருக்கு ஒருவர் மனமார பேசி கொள்வது என்பது
அந்த காலத்தில் முதல் இரவு எனும் வைபவத்தில்தான். அதற்க்கு இடையே எத்தனை மாதங்கள் ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் பார்பதோ பேசுவதோ முடியாது. ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே அவள் வீட்டை வீட்டு வெளியில் செல்ல முடியாது. அதன் பின்பு அந்த பெண் வெளி உலகத்தை முழுமையாக பார்ப்பது என்பது கணவனுடன் திருமணமாகி வெளியில் செல்லும்போது மட்டும்தான்.

பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஜாதக பொருத்தம், திருமண பொருத்தம் போன்ற முறைகளை கடைபிடித்து திருமணம் செய்து வைத்தபோதும் இப்பொது கடைபிடிக்கும்போதும் பெரும்பாலான திருமணங்கள் மகிழ்சிகரமான திருமண வாழ்க்கையாக இன்றளவிலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.    

 
 ஆனால் தாங்களாகவே துணையை தேர்ந்தெடுக்கும்போது அந்த மாதிரியான திருமணங்கள் நீடித்து நிற்பதில் பிரச்சனைகள் உருவாகிறது. காரணம் இயற்க்கை விதிகளை மதிக்காததின் விளைவுதான்.

ஜாதகபொருத்தம்  திருமண பொருத்தம் போன்றவைகள் எல்லாம் இயற்கை விதிகளின் இன்னொரு முகம். ஒரு மனிதனுடைய ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய குணாதிசயங்களை பிரதி பலிப்பவைதான் ஜாதக கட்டங்கள். எனவே பொருத்தமான ஆணுடைய ஜாதகத்தையும் பொருத்தமான பெண்ணுடைய ஜாதகத்தையும் திருமணதிற்கு
தேர்ந்தெடுக்கும்போது அந்த திருமணம் சந்தோசமான திருமணமாக அமைகிறது என்பதில் சந்தேகம் இல்லை
    
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள