திருமண வாழ்க்கையில் சிலருக்கு மகிழ்ச்சியின்மை ஏன்?


சமீப காலங்களில் திருமணமான தம்பதியிரிடம் திருமண பிரச்சனைகள் தான் அதிகமாக உள்ளன சில திருமணங்கள் குழந்தை பிறக்கும் வரை நீடிக்கின்றது சில திருமணங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் வரைதான் நீடிக்கின்றது. அதன் பின்பு விவாகரத்து அல்லது கணவன் அல்லது மனைவிட்யிடம் இருந்து நிரந்தர பிரிவு.

பெற்றோர்களாக பார்த்து பெண்ணுக்கோ பையனுக்கோ வரன் தேடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது என்பது சமீப காலமாக குறைந்து விட்டது.

இப்போது உள்ள பிள்ளைகள் பெற்றவர்களுக்கு இந்த ஒரு விசயத்தில் ஆவது சிரமத்தை கொடுக்க கூடாது என்று அவர்களே பெண்ணையோ பையனையோ தேர்ந்தெடுத்து அப்பா அம்மாவிடம் முறையிடுகின்றனர்.

சில பெற்றோர்கள் பெருந்தன்மையாக அவர்களுடைய வாழ்க்கை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளட்டும் என்று பச்சை கொடி காட்டி விடுகின்றனர். திருமணத்தையும்  arranged marriage போல் நடத்தி விடுகின்றனர்.

சில பெற்றோர்கள் வரிந்து கட்டி கொண்டு அதெல்லாம் ஒத்து கொள்ள மாட்டோம் நாங்கள் பார்த்து சொல்லும் பெண்ணையோ பையனையோ தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று போர் கொடி தூக்குவர்.

தைரியமான பையனோ பெண்ணோ நீங்கள் என்ன கொடி வேண்டுமானாலும் தூக்குங்கள் எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை என்று சொல்லி விட்டு கோயிலில் போய் திருமணத்தை முடித்து விடுகின்றனர்.

 இது போன்று பெற்றோரை எதிர்த்து அல்லது பெற்றோர்களிடம் சம்மதத்தை பெற்று arranged marriage போல் செய்யப்படும் பெரும்பாலான  கல்யாணங்களில் தான் பாதியிலேயே மன வாழ்க்கை முறிந்து விவாகரத்து வரை செல்வதற்கான காரணம்

இது போன்று பாதியிலையே முறிந்து விடும் திருமண உறவுகளுக்கும் அல்லது திருமண வாழ்வில் மகிழ்ச்சி இன்மைக்கும் காரணம் என்ன? ஜாதகரீதியாக இதற்க்கு விளக்கம் என்ன?

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அவர்களுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் திருமண ஸ்தானம் பாபிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு,   களத்திர ஸ்தானாதிபதி பாபிகளுடன் கூட்டணி போட்டு இருந்தாலோ, அங்கிருந்து லக்னத்தை பார்வை இட்டாலோ அது போன்ற ஜாதகருக்கு நடை பெரும் திருமணங்களில் பெரும்பாலனவை  பிற்காலத்தில் கணவன் மனைவிக்கு கருத்து  வேற்றுமை  ஏற்பட்டு பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை வருகிறது.               

திருமணம் செய்யும் முன்பு இதுபோன்று அமைப்பு உள்ள ஜாதகங்களை வேறு ஒரு பொருத்தமுள்ள ஜாதகங்களுடன் சேர்த்து வைத்தால் அல்லது திருமணம் செய்து கொண்டால் அது போன்ற திருமணங்கள் நல்லபடியாக கடைசி வரை நீடித்து நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களுடைய திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் நீடித்து நிற்கும்


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள