திருமண பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமா?

திருமண பொருத்தம் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஆனால் அது பத்து திருமண பொருத்தங்களின் அடிப்படையில் மட்டும் இருக்க கூடாது.

பொதுவாக ஒரு கல்யாணம் பற்றி நினைக்கும்போது அல்லது பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் திருமண பொருத்தம் இருக்கிறதா,

திருமண பொருத்தம் என்பது பத்து பொருத்தங்களின் அடிப்படையில் இருக்கும் என்று நினைத்து கொண்டு இருகிறார்கள். அவை தினம், கணம், மகேந்த்ரம், ஸ்திரீ, யோனி, ராசி, ராசி அதிபதி, வசிய, ரஜ்ஜு, வேதை என்ற பொருத்தங்கள் ஆகும். பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட அளவு பொருத்தங்கள் பொருந்தி வந்தால் சரி இந்த ஜோடிக்கு திருமண பொருத்தம் இருக்கிறது என்று முடிவினை எடுத்து அந்த திருமணம் நடத்தலாம் என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

திருமணம் செய்வது என்பது நல்ல விசயம்தான். அதற்காக அவசரப்பட கூடாது ஏனென்றால் இது வாழ்க்கை பிரச்னை.

இன்னும் சிலர் இலவசமாக கிடைக்கும் பத்து திருமண பொறுத்த தகவல்கள் மற்றும் புஸ்தகங்களை வைத்து அவர்களே இது நல்ல ஜோடி, இந்த ஜோடி பொருத்தம் இல்லை என்பதை தீர்மானித்து விடுகிறார்கள். ஒன்று திருமணத்தை நடத்துகிறார்கள் அல்லது நிராகரித்து விடுகிறார்கள். அப்படி செய்தால் அது தப்பு கணக்காகி விடும்.

ஒரு நல்லதொரு  திருமணத்திற்கும், பல காலம் நிலைத்து நிற்கும் திருமணத்திற்கும், பத்து பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதாது. 
அவர்கள் இவருடைய ஜாதகத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களை பார்க்க வேண்டும். 

அவர்கள் இருவருடைய ஜாதகத்திலும் களத்திரகாரகன் யார், அவன் நிலை என்ன, நல்ல நிலைமையில் இருக்கிறானா, கெட்டு இருக்கிறனா.  சப்தமாபதி யார், அவன் நிலை என்ன, நல்ல நிலமையில் இருக்கிறானா, கெட்டு இருக்கிறானா, மறைவு ஸ்தான அதிபதிகளின் நிலைமை, தசா நிலைமை, பாதகாதிபதிகளின் நிலை போன்ற இன்னும் பல ஜோதிட விதிகளை வைத்துதான் திருமண ஜோடிகளை நிர்ணயம் செய்ய வேண்டும். 

அது போன்று அந்த காலத்தில் எல்லா விதிகளையும் பார்த்து திருமணங்களை நிச்சயம் செய்ததினால்தான் பல தம்பதியர்  அறுபதாம் கல்யாணம், என்பதாம் கல்யாணம் என்று நடத்தி இன்னும் நல்ல உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். 

எனவே பத்து திருமண பொருத்தம் என்பது நல்ல திருமண பொறுத்ததிற்கு
ஒரு அங்கமாகும் அதுவே முடிவு ஆகாது. ஜாதகத்தையும் பார்த்து அதில் உள்ள முக்கிய அம்சங்களை பார்த்துதான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள