உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா?

கால் காசு ஆனாலும் அரசாங்க காசானால் அதில் ஒரு கெளரவம் உண்டு என்ற பழமொழி உண்டு. 

சமீப காலமாக அரசு வேலைக்கான வாய்ப்புகள் நிறைய குமிந்து வருகின்றன. பல துறைகளில் மத்திய அரசாகட்டும் மாநில அரசாகட்டும் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறன்றன.
சில வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

சரி இது போன்ற அறிவிப்புகள் வந்தாலும் ஜோதிட ரீதியாக அரசு வேலை கிடைப்பதற்கு அமைப்புகள் சரியாக இருக்க வேண்டுமா?

சில அனுபவ விசயங்களை பார்க்கும்போது ஒருவருக்கு அரசு வேலை அமைவதற்கு ஜாதக கட்டத்தில் உள்ள சில கிரகங்களின் சாதகமான
அமைப்பு தான் அரசு வேலை கிடைப்பதற்கு காரணமாகிறது. அரசு வேலைக்கு பொறுப்பாக இருக்ககூடிய கிரகம் நல்ல இடத்தில அமர்ந்து, நல்லவர்களின் பார்வை பெற்று, நல்லவர்களிடம் கூட்டு சேர்ந்து இருந்தால் அந்த நபருக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும். இவர் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தால் கூட வலுவிக்க அவருக்கு அரசு வேலை கிடைக்கும். கிரகங்களின் விளையாட்டே அதுதான்

அதே சமயத்தில் ஜாதக அமைப்பு அவருக்கு சாதகமாக இல்லையென்றால்
சில தெய்வீக வழிபாடுகளை மேற்கொண்டு சாதகம் இல்லாத கிரகங்களை சாதகம் ஆக்கி கொண்டு அவர்களுடைய லட்சிய கனவை நிறைவேற்றி கொள்ளலாமே? தெய்வத்துக்கு மீறிய சக்தி எதுவும் இந்த உலகத்தில் இல்லை.

அதற்காக ஒருவருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் உடனேயே வெறுத்து போய் மூலையில் ஒதுங்கி போய் முடங்கிவிடகூடாது
அரசு வேலை இல்லையென்றால் அவர் பெரிய தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கலாம். எல்லாரும் அரசாங்க வேலைக்கு சென்று விட்டால் மற்ற வேலைகள் தொழில்கள் எல்லாம் எல்லாம் யார் பார்ப்பது?

இந்த கட்டுரையின் நோக்கமே அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்து அதை பற்றி தெரியாமல் அல்லது முயற்சி செய்யாமல் இருப்பவர்கள் கிரகங்கள் சாதகமாக இருந்து அந்த வேலைக்குண்டான மற்ற பயற்சிகளை எடுத்து அரசாங்க வேலைக்கு செல்லலாமே?


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள