தொழில் சரியாக நடக்காததற்கு காரணம் என்ன?

வானில் சுற்றி கொண்டு இருக்கும் 9 கிரகங்களும் ஒவ்வொரு மனிதர்களுடைய  வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தங்கள் கையில் எடுத்து கொண்டு நன்மையையோ தீமையையோ அந்த கிரகங்கள் அந்த மனிதன் பிறக்கும்போது எந்த நிலையில் இருந்தனரோ அதற்க்கு தகுந்தாற்போல் பலனை .தருவர். 

உதாரனத்திற்க்கு படிப்புற்குரிய கிரகம் கெட்ட இடத்தில அமர்ந்துவிட்டால் சுட்டு போட்டாலும் அந்த நபருக்கு படிப்பு .வராது. அதனால் அவர் இந்த உலகத்தில் வாழ லாயக்கு இல்லாதவர் என்று அர்த்தம் .இல்லை.
படிப்பு இல்லையென்றால் படிக்காத மேதையாக வலம் வந்து வேறு துறையில் சாதனை .படைப்பார்.

இது போன்று மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கிரகங்கள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு நன்மையோ .தீமையோ செய்கின்றனர். 

அது போன்று தொழில் என்பதும் மனித வாழ்க்கையின் .ஒரு அங்கம்தான். இந்த தொழில் சிறக்க அந்த மனிதன் பிறக்கும் காலத்தில் தொழில் காரகன் என கூறப்படும் ,கிரகமும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த கிரகமும், தொழில் ஸ்தானத்தை பார்வையிடும் கிரகமும் நன்மை செய்யகூடிய கிரகமாக .இருக்கவேண்டும். அப்படி நன்மை செய்யும் கிரகமாக அமைந்து விட்டால் அந்த நபருக்கு தொழிலை பொறுத்த வரை எந்த பிரச்னையும் இல்லை.  எல்லாவற்றிலும் வெற்றி. பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டி கொண்டு இருக்கும்.

நல்ல கிரகங்கள் பார்த்தால்,அமர்ந்தால், கூடினால் மட்டும் .போதாது. அந்த கிரகதுர்க்குரிய பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுத்து .செய்யவேண்டும். அப்படி தேர்ந்தெடுத்து செய்யும்போது தான் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெற்றியும் பணமும் .கிடைக்கிறது.

தவறான கிரக அமைப்பிலும், கிரக பார்வையிலும், கிரக சேர்க்கையிலும்
பொருத்தமில்லாத தொழிலை தேர்ந்தெடுக்கும் போதுதான் தொழில் சரியாக நடக்க முடியாமல் பாதியில் மூடு விழா நடத்தக்கூடிய சூழ்நிலை .உருவாகிறது


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள