உங்கள் தொழில் வேலை வியாபாரம் உங்களுக்கு பொருத்தமானதா?

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும். அது
மாதாந்திர சம்பளத்திற்கோ அல்லது ஏதாவது ஒரு வியாபாரத்தையோ  அவர்கள் செய்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.   

உத்தியோகமோ, தொழிலோ, வியாபாரமோ ஏதாவது செய்தால்தான் இன்று
இந்த உலகத்தில் காலத்தை ஓட்ட முடியும்.

ஏதாவது தொழில் உத்தியோகம், வியாபாரம் செய்தால் மட்டும் போதாது. செய்யும் தொழிலும், உத்தியோகமும் , வியாபாரமும் அவர்களுக்கு பொருத்தமானதாகவும்  திருப்தியான வருமானத்தையும்  கொடுக்கவேண்டும்.

ஆனால் நடைமுறையில் திருப்தியான வருமானத்தை அனைவராலும் சம்பாதிக்க முடியாது.காரணம் தொழிலில் போட்டி, வியாபார போட்டி, உத்தியோகத்தில் கூட வேலை பார்ப்பவர்களிடையே போட்டி. இந்த போட்டியெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் அவர் பார்க்கும் வேலையில் தொழிலில் உத்தியோகத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டும். அவர் பொருத்தமான தொழிலை செய்யவேண்டும்.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ உத்தியோகத்திலோ வியாபாரத்தில்
திறமை சாலியாக இருக்கிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் சாதகமான
கிரக அமைப்புகள் இருக்க வேண்டும். சாதகமான கிரக அமைப்பு இருந்தால்தான் அவர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் திறமைசாலியாக இருக்க முடியும்.

சாதகமான் கிரக அமைப்பின் பிரகாரம் அதற்கு பொருத்தமான தொழிலை செய்தார் என்றால் நிச்சயமாக மற்றவர்களில் இருந்து தனித்து இருந்து தொழிலில் கொடி கட்டி பறப்பார்.  வெற்றி வாகையும்  சூடுவார்.

எனவே ஒருவர் பொருத்தமான எந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்தால் திறமைசாலியாகவும் வியாபாரத்தில் வெற்றி வாகை சூட முடியும் என்று தெரிந்து அந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் நிச்சயமாக
 எல்லாவிதத்திலும் வெற்றி வாகை சூடி சந்தோசமாக வாழலாம். 


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள