யாருக்கு எந்த தொழில் வெற்றியையும் லாபம் தரும்?

இந்த உலகத்தில் ஒரு சிலர் ஏதாவது விதத்தில் ஒரு வியாபாரம் செய்கின்றனர்.
இன்னும் சிலர் மாதந்திர சம்பளதிர்க்காக உத்தியோகம் பார்க்கின்றனர்.
இன்னும் சிலர் தங்களுடைய படிப்பை வைத்து அது சம்பந்தமான தொழிலை செய்கின்றனர். உதாரணதிற்கு டாக்டர்கள் ஆடிட்டர்கள். இன்னும் சிலர் அன்றாடம் கூலிக்காக உழைத்து கொண்டு இருக்கின்றனர். உழைத்தால் கூலி வேலை இருந்தால் கூலி இல்லையென்றால் இல்லை

சரி இவர்களில் எத்தனை பேர்  மன திருப்தியுடன் தங்கள் வேலையை செய்கின்றனர்?

எத்தனை பேர் தங்கள் செய்யும் தொழில் உத்தியோகம் வியாபாரம் இவற்றில் கணிசமான அல்லது மனதிற்கு திருப்தியான தொகையை வருமானமாக
சம்பாதிக்கிறார்களா?

நிச்சயமாக பெரும்பாலானோர் தாங்கள் செய்யும் தொழில், உத்தியோகம் இவற்றில் விருப்பம் இல்லாமல் தான் ஈடுபட்டு கொண்டு இருப்பர். காரணம் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதினால் உண்டாகும் சலிப்பு அல்லது உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் இருக்கும்.

இதையே அவர்கள் தங்களுக்கு பிடித்த உத்தியோகம் தொழில் ஈடுபடும்போது சலிப்பு என்பதே இல்லாமல் விருப்பத்துடன் ஈடுபடுவர். சலிப்பு இல்லாமல் விருப்பத்துடன் ஈடுபடும் எந்த தொழிலும்  உத்தியோகமும்  எப்பொழுதுமே வெற்றியையும் பணத்தையும் அள்ளி தரும்.

 அப்படியென்றால் ஒருவருடைய ஜாதகத்தின் மூலம் அவர்களுக்கு எந்த தொழில் உத்தியோகம் செய்தால் லாபத்தையும், வெற்றியையும், மன நிறைவையும் பணவசதியையும் தரும் என்று கண்டுபிடிக்க முடியுமா?

நிச்சயம் முடியும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தை வைத்து
தொழில் ஸ்தானதிபதி யாருடன் கூட்டு சேர்ந்துள்ளார், எந்த வீட்டில் இருக்கின்றார், போன்று இன்னும் சில அம்சங்களை பார்த்து
ஒருவருக்கு என்ன தொழில் உத்தியோகம் லாபத்தையும், வெற்றியையும், மன நிறைவையும் பணவசதியையும் தரும் என்று  அறிந்து அதற்க்கு தகுந்தாற்போல் தொழிலை, உத்தியோகத்தையும் அமைத்து கொண்டு வெற்றியையும், லாபத்தையும், பண வசதியையும் பெறலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள