சிலருக்கு திருமணம் ஏன் கால தாமதம் ஆகிறது?

சிலருக்கு திருமணம் என்பது அவ்வளவு சீக்கிரத்தில் நடை பெறாது. மணமகனையோ மணமகளையோ தேடி கொண்டே
இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தள்ளி போய்கொண்டே இருக்கும்.
ஆனால் சிலருக்கு பார்த்தல் மிகவும் இள வயதிலேயே திருமணம் 
ஆகி விடும். 

சிலருக்கு சாமானியமாக திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் சிலருக்கு எதிர்பார்ப்புக்கு 
மேலாக இள வயதிலேயே திருமணம் ஆவதற்கும் 
காரணமென்ன?

எல்லாமே கிரக அமைப்பினால்தான். பிறக்கும் போது ஜனன நேரத்தில் 
அமைந்த கிரக சேர்க்கை, கிரக பார்வை, கிரகங்கள் அமைந்த இடங்களை பொறுத்து திருமண தாமதமோ அல்லது இளம் வயதிலேயே திருமணம் நடைபெறுகிறது. 

நல்லதொரு மணவாழ்க்கையை ஏற்படுத்தி தரும்
  7 க்குரிய அதிபதியும் 7 க்குண்டான  கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் பாதகமான இடத்தில் 
இருந்தாலும்,  பாதகத்தை ஏற்படுத்தகூடிய கிரகங்களுடன் கூடி
நின்றாலும், பாதகத்தை உண்டாக்கும் கிரகங்கள் 7 ஆம் இடத்தை 
பார்த்தாலும் திருமண தடை தாமதம் உண்டாகிறது. 

இவற்றை தவிர இரண்டாம் இடத்து அதிபதியும்,
இரண்டுக்குரிய கிரகமும், இரண்டாம் இடத்தை பார்வை
செய்யும் கிரகமும்  கெட்டிருந்தாலும் திருமண தடை
உண்டாகிறது.

சரி இதுபோன்று அமைப்பு உள்ளவர்களுக்கு தடை உண்டாகி 
கொண்டுதான் இருக்குமா? திருமணமே நடக்காதா?

நிச்சயமாக அது போன்று இல்லை. திருமண தடையை 
விலக்குவதர்க்கு ஜோதிடத்தில் வழியும் உண்டு.

சில எளிய 
வழிபட்டு முறைகளை ஜாதகத்தின் வாயிலாக அறிந்து முறையாக மேற்கொண்டால் திருமண தடையை விலக்கி நல்லதொரு
மணவாழ்க்கையை விரைவாக ஏற்படுத்தி கொள்ளலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள