கணவன் மனைவியரிடத்து பிரிவு ஏன் உண்டாகிறது?


கணவன் மனைவி இருவரிடம் ஒற்றுமை இல்லாமல்
இருப்பது அல்லது பிரிவு என்பது சமீப காலமாக
பேசப்படும் அல்லது கேள்விப்படும் விசயமாகும். 

அதே போன்று திருமணம் ஆகிய சில காலத்திற்குள்ளேயே கணவன் மனைவியிரிடத்து
நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ
பிரிவினை உண்டாகிவிடுகிறது. 

இது போன்ற நிகழ்வுகளினால் குடும்பத்திற்கும் நல்லது அல்ல. 
குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய மனதிலும் தாய் 
தந்தையாருடைய பிரிவு தாழ்வு மனப்பான்மையையும் 
ஏற்படுத்தி விடுகிறது. 

சரி இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்து அதிபதி பகை
பெற்று, பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்று, பாவ கிரக பார்வை பெற்றால் கணவன் மனைவியிடத்து
ஒற்றுமை இருக்காது.  

அதே போன்று களத்திர ஸ்தானத்தில் பாவ கிரகங்கள்
அமைய பெற்று, பாவ கிரக பார்வை பெற்று,  களத்திர ஸ்தானாதிபதி பகை நீசம் பெற்று,  
பாவ கிரக பார்வை பெற்று இருந்தாலும் கணவன் 
மனைவியிரடையே ஒற்றுமை இருக்காது.

நல்ல களத்திரதுக்குரிய சுக்கிரன் தீய
சேர்க்கை, தீய பார்வை, தீய இடத்தில் இருந்தாலும் கணவன் மனைவியினிடத்து ஒற்றுமை இருக்காது.   

கணவன் மனைவியிடத்து நிரந்தரமாகவோ
தற்காலிகமாகவோ பிரிவு உண்டாவதற்க்கும்  
வாய்ப்பு உண்டு.
சரி இதுபோன்று கணவன் மனைவியிடத்து ஒற்றுமையை
ஏற்படுத்தி, பிரிவை தடுக்கமுடியாதா?  

நிச்சயமாக ஒற்றுமையை ஏற்படுத்தி பிரிவை சரி செய்யலாம்.

கணவன் மனைவி இவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து சில
வழிபட்டு முறைகளை மேற்கொண்டால் கணவன்
மனைவியிரடத்து ஒற்றுமையை ஏற்படுத்தி
பிரிவை தடுக்கலாம்.


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள