சிலருக்கு கல்யாணம் தாமதம் ஏன்?

கல்யாணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஒரு முக்கியமான திருப்பு

முனையாக அமையக்கூடிய நிகழ்ச்சி. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் முழுமை அடைவது கல்யாணம் என்னும் பந்தத்தில்தான்.
ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பது அதிக சிரமம் இல்லாமல் நடந்து, குழந்தைகளை பெற்று கொண்டு, பின்பு அந்த குழந்தைகள் பெரியவர்களாகி வாழ்க்கையில் நிம்மதியாக settle ஆகி விடுவர். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டும், இருக்கும் சேமிப்பில் கடைசி காலத்திற்கு வைத்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பதே ஒரு பெரிய போராட்டம் ஆகத்தான் இருக்கும். மாப்பிளையோ பெண்ணோ நல்ல அழகு, அந்தஸ்து, சொத்து, சுகம், வண்டி போன்ற அணைத்து வசதிகளும் இருக்கும் ஆனால் கல்யாணம் என்பது கால தாமதாமாகி கொண்டே செல்லும்.

சரி காதலித்துதான் திருமணம் செய்யலாம் என்று இருந்தால் இவர்களை காதலிப்பதற்கு ஆள் யாரும் இருக்கமாட்டார்கள்.

அம்மா அப்பாவிற்கு அடங்கின பிள்ளையாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் விருப்பத்திற்கு பெண்ணோ பையனோ பார்க்கலாம் என்றால் சரியான வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிக் கொண்டே செல்லும்.

இதுபோன்று கல்யாணம் நடக்காமல் தள்ளி கொண்டே போவதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம்?

ஒருவர் பிறக்கும்போதே அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதினை அவர் பிறக்கும்போது வானில் நிலை கொண்டிருந்த கிரகங்கள் தீர்மானம் செய்து விடுகின்றன.

ஆம் ஒருவர் என்ன குணாதிசயம் உடையவர், நல்லவரா கெட்டவரா, அவர் படிப்பாரா படிக்க மாட்டாரா, சம்பளத்திற்கு வேலைக்கு போவாரா அல்லது வியாபாரம் செய்து பிழைப்பாரா, வீடு கட்டுவாரா அல்லது வீடு கட்டும் யோகம் கிடையாதா, அவருக்கு நோய், கடன், நிலைமை எப்படி இருக்கும் போன்ற பல விசயங்களை கிரகங்கள் தீர்மானிக்கின்றன.

அதுபோன்று ஒருவருக்கு அமையக்கூடிய கல்யாணமும் கிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நன்மை செய்யும் கிரக கட்டுபாட்டில் ஒருவருடைய திருமண அமைப்பு இருந்தால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. தீமை செய்யும் கிரக கட்டுபாட்டில் இருந்தால் அல்லது நன்மை செய்யும் கிரகங்கள் நன்மை செய்ய முடியாத அளவிற்கு கைகள் கட்டுப்பட்டு இருந்தால் அவருக்கு கல்யாணம் தாமதமாக தான் செய்யும்.

கிரகங்களின் நிலையினைத்தான் ஒருவருடைய ஜாதகம் பிரதிபலிக்கின்றது. அதில் உள்ள ஸ்தானங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் அணைத்து விசயங்களும் எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கின்றது. 

அந்த விசயத்தில் ஒருவருடைய கல்யாணம் தாமதமாகிறது என்றால் அதற்க்கு பல காரணங்கள் உண்டு. 

அவற்றில் ஒன்று ஒருவருடைய குடும்பஸ்தானமும், அதன் அதிபதியும், களத்திர ஸ்தானமும் அதன் அதிபதியும் கிரக கூட்டு, கிரக பார்வை, இருப்பிடம் போன்றவற்றால் பாதிக்க பட்டு இருந்தால் அவருடைய கல்யாணம் தாமதமாகி கொண்டு செல்லும்.

அப்படி என்றால் கல்யாண தாமதத்தை நிவர்த்தி செய்ய முடியாதா? கல்யாணம் தாமதமாவதை தடுக்க முடியாதா? நிச்சயம் முடியும்.

ஒருவருடைய குடும்பஸ்தானத்தையும் கலதிரஸ்தானத்தையும் ஆராய்ந்து உரிய கிரக நிவர்த்திகள் செய்யும் பட்சத்தில் கெடுதல் செய்யும் கிரகங்கள் விலகி நின்று விரைவில் கல்யாணம் நடப்பதற்கு வழி செய்யும்.
  
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

புத்தகங்கள் எழுதி புகழ் மற்றும் லாபம் யாருக்கு?

புத்தகங்கள் என்பவை மனிதர்களின் அறிவு விருத்திக்கு மிக பெரிய பங்காற்றுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

பொதுவாக ஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள்தான் அவர்கள் சார்ந்த துறையை பற்றி புத்தகங்கள் எழுத முடியும். சமையல் கலையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் சமையல் செய்வது எப்படி என்று புத்தகம் எழுதுவார்கள். கல்லூரி களில் ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர்கள் அவர் சார்ந்த துறையை பற்றி மாணவர்கள் பயன் பெரும் விதத்தில் புத்தகம் எழுதுவார்கள். இதுபோன்று விஞ்ஞானம், கணிதம், கலை, வியாபாரம், marketing, போன்ற துறையில் உள்ளவர்கள் அவர்கள் தாங்கள் சார்ந்த துறைகளை பற்றி மற்றவர்களுக்கு பயன் பட வேண்டும் என்று புத்தகம் எழுதுவார்கள்.

இவைகளை தவிர மக்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் வார பத்திரிக்கைகள், மாத பத்திரிக்கைகள் போன்ற பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும் இருக்கின்றனர். பெண்களுக்கு என்று பத்திரிக்கை, குழந்தைகளுக்கு என்று பத்திரிக்கை, சினிமா ரசிகர்களுக்கு என்று பத்திரிக்கை, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு என்று பத்திரிக்கை என்று பல வித பத்திரிக்கைகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.       

சரி, இதுபோன்று எழுதுபவர்கள் எல்லாம் பொழுது போக்கிற்காக எழுதுகின்றனரா? இருக்கலாம் ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

பெரும்பாலானவர்கள் தங்கள் அனுபவம், திறமை மற்றவர்களுக்கு பயன் பட வேண்டும் என்ற நோக்கத்திலும், அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக தாங்களும் புத்தகம், பத்திரிக்கை வெளியிடுவதின் மூலமாக ஒரு தொகை சம்பாதிப்பதற்காகதான் என்று சொன்னால் அதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் புத்தகம் எழுதும் எல்லோரும் பத்திரிக்கை வெளியிடுபவர்கள் எல்லோரும் நல்ல வருமானமும் புகழும் அடைய முடியுமா?

ஒரு நிஜ உதாரணத்தை இங்கு கூறுகிறேன். உங்களுக்கு எல்லாம் தெரியும் Harrypotter என்ற நாவல்கள் சமீபத்தில் உலக அளவில் புகழ் பெற்ற நாவல்கள், அந்த நாவல்களை எழுதிய ஆசிரியர் J.K.Rowling  என்ற பெண்மணி ஆவார். இங்கிலாந்து நாட்டில் 1965 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1999 ஆம் ஆண்டு முதல் புகழ் பெற்ற Haary Potter நாவல்களை எழுதி இன்று உலகின் எழுத்து மூலம் தன்னுடைய புத்தகங்கள் மூலம் சம்பாதித்து கொண்டு இருக்கும் மிக பெரிய கோடீஸ்வரி ஆவார்.

உலகில் எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கின்றனர், ஆனால் எல்லோராலும் J.K Rowling போன்று புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ஆக முடியாவிட்டாலும், ஓரளவு ஆவது புகழ் பெற முடிவதில்லையே ஏன்?

ஜோதிட ரீதியாக இதற்குரிய விளக்கம் என்ன?

ஒருவர் புத்தகம் எழுதி அதை வெளியிட்டு புகழ் மற்றும் பணம் பெற வேண்டும் என்றால், ஏதாவது ஒரு துறையில் நல்ல நிபுணத்துவம் இருக்கவேண்டும். அடுத்து சமயோசிதபுத்தியும் நல்ல கற்பனை திறனும் வேண்டும். அதற்க்கு அடுத்து எழுதும் புத்தகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து அதற்குரிய லாபம் கிடைக்க வேண்டும்.

இவை அனைத்தும் ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரக நிலைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அந்த விதத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் வித்யாகாரகன், மாத்ருகாருகன், தேவ குரு, தன ஸ்தானாதிபதி, லாபாதிபதி, கர்மச்தானதிபதி போன்றவை நல்லவிதத்தில் அமைய பெற்று, சேர்க்கை, பார்வை போன்றவற்றில் பாதிக்கபடாமல் இருந்தால் ஒருவர் நிச்சயமாக புத்தகங்கள் எழுதி, பத்திரிக்கைகள் வெளியிட்டு புகழும், பணமும் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.        
  


ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

திருமண பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா?

திருமண பொருத்தம் என்பது திருமணமாகும் ஆணினுடைய மற்றும் பெண்ணினுடைய நட்சத்திரம், ராசி இவைகளின் அடிப்படையில் 10 பொருத்தங்கள் பார்க்கப்பட்டு பொருத்தங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண பொருத்தம் இருக்கிறது என்று முடிவு செய்து திருமணம் செய்து வைக்கின்றனர் சிலர்.

பத்து திருமண பொருத்தங்கள் என்பது தின பொருத்தம், கன பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்திரீ தீர்க்கம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வேதை பொருத்தம் போன்றவையாகும்.    

இன்று இன்டர்நெட் போன்றவற்றில் இலவசமாக கிடைக்கும் சில திருமணம் பற்றிய இலவச தகவல்களின் மூலம் சிலர் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் முடிவும் எடுக்கின்றனர்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பல மொழி உண்டு. ஒரு தம்பதியருக்கு பிறக்கும் வாரிசுகள் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள் மூலமாகவும், அதன் பின்பு பிறக்கும் வாரிசுகள் மூலமாகவும் எத்தனையோ தலைமுறைகள் உருவாக போகின்றன. அதனால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்று கூறி இருக்கலாம்.
எனவே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய 10 திருமண பொருத்தங்களின் அடிப்படையில் மட்டும் திருமணத்தை நடத்தலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்கலாமா?

என்னை பொறுத்தவரை திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் அதே சமயத்தில் திருமண பொருத்தம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்து கொண்டு ஒரு திருமணத்தை நடத்துவதா வேண்டாமா என்று முடிவு செய்வது தவறு.

அதனால்தான் திருமண பொருத்தம் பார்த்து செய்யும் சில திருமணங்கள் நீடித்து இருப்பதில்லை அல்லது விவாகரத்து வரை சென்று விடுகிறது. நான் மேலே சொன்னவாறு திருமண பொருத்தங்கள் என்பது ஒரு ஆணினுடைய மற்றும் ஒரு பெண்ணினுடைய ராசியையும் நட்சத்திரத்தையும் வைத்து மட்டும் கணிக்க படுகிறது. அதில் அவ்வளவு துல்லியமாக பொருத்தத்தை அறிய முடியாது. ராசி நட்சத்திரம் என்பது பலருக்கும் பொதுவான அம்சம்.

அப்படி என்றால் எது சரியான முறை? 

பெண் மற்றும் ஆண் இருவருடைய ஜாதகத்தில் உள்ள மற்ற அம்சங்களை பார்க்கவேண்டும். ஜாதகத்தில் உள்ள மற்ற அம்சங்களை பார்க்கும்போதுதான் அந்த பெண்ணுக்கோ அல்லது அந்த ஆணுக்கோ என்ன தோஷங்கள் இருக்கின்றது, குழந்தை பிறப்பிற்கு தடை எதுவும் இருக்கின்றதா, ஆயுள் தீர்க்கமாக இருக்கின்றதா, குடும்பத்தினை கட்டி அணைத்து செல்லும் மனைவியாக இருப்பாரா போன்ற பல விசயங்களை பார்க்க முடியும். ஒரு ஜாதகத்தின் மூலம் ஒரு ஆண் அல்லது பெண்ணினுடைய உண்மையான குணாதிசயத்தை அறிந்து கொள்ள முடியும்.    

அப்படி ஜாதகத்தினை ஒப்பிட்டு பார்த்து, அதில் உள்ள கிரகங்களின் பார்வை, இருப்பிடம், சேர்க்கை போன்றவற்றை கணக்கில் கொண்டு, அதன் பின்பு திருமண பொருத்தத்தையும் கணக்கில் கொண்டு, திருமணம் செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

இது போன்று திருமண பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் இரண்டையும் ஒரு சேர பார்த்து, அதன் அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் நீடித்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.               

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

நல்ல வேலை யாருக்கு கிடைக்கும்?

வேலை பார்க்கவேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். புருஷ லக்ஷணம் என்றால் ஒருவர் வேலை பார்க்கவேண்டும்.
பெரும்பாலனவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்துவதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்  அவர்கள் பார்க்கும் வேலை அவர்கள் தகுதிக்கேற்ற வேலையாகவும், அனுபவத்திற்கு ஏற்ற வேலையாகவும் இருந்தால் மனமுவந்து அந்த வேலையை செய்வார்கள். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு நல்ல ஒரு திருப்தியான வருமானத்தையும் ஈட்டுவார்கள்.

ஒருவர் தான் செய்யும் வேலை பிடித்து விட்டது என்றால் அந்த வேலையிலேயே நிரந்திரமாக இருந்து சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். ஒரு வேலை பிடித்து அதில் ஒருவர் நிரந்திரமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வேலைகுண்டான அனுபவம், திறமை, அறிவு எல்லாம் நிரம்ப இருந்தால்தான் அவரால் அந்த வேலையில் சந்தோசமாகவும், நிரந்தரமாகவும் இருக்க முடியும்.

ஆனால் சிலர் பார்த்தீர்கள் என்றால் அடிக்கடி வேலையை மாற்றி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு வேலையிலும் நிரந்திரமாகவே இருக்க மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு பிடித்தமில்லாத வேலையில் ஏதோ வலுகட்டாயமாக வேலை செய்தாக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தின் பேரில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.

சரி, ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் ஜோதிட ரீதியாக என்ன தீர்வு?

ஒருவருக்கு நல்ல வேலை அமைய வேண்டும் என்றால் முதலில் அவருடைய உயிர் ஸ்தானம் கெட்டு போகாமல் இருக்க வேண்டும். கெட்டு போகாமல் என்றால் பார்வை, சேர்க்கை, இருப்பிடம் போன்றவைகளால் அவை பாதிக்கப்பட்டு இருக்ககூடாது.
அடுத்து அவருடைய உயிர் ஸ்தானாதிபதி கர்ம ஸ்தானத்தில் நல்ல வலுவுடனும், பார்வை, சேர்க்கை, இருப்பிடம் போன்றவற்றினால் பாதிக்கபடாமல் இருந்தால் அவருக்கு மன திருப்தியான வேலை கிடைக்கும்.

இவைகளை தவிர இன்னும் சில முக்கிய ஸ்தானங்கள் பாதிக்க படாமல் இருந்தால் நல்ல சம்பளமும், கிடைக்கும் அந்த சம்பளம் நல்ல உபயோகமான காரியங்களுக்கும் செலவாகும். சேமித்து வைக்க வாய்ப்பும் உருவாகும்.

சரி இது போன்று அமைப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்காதா?

ஏன் கிடைக்காது? கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட கிரகங்களுக்கு உரிய வழிமுறைகளை மேற்கொள்ளும்போது தடைகள் விலகி, நல்ல வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.         
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

கடன் பிரச்சனையில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அன்றாடம் செய்தி தாள்களில் பார்க்கிறோம். கணவன்,மனைவி, அவர்களுடைய குழந்தை விஷம் குடித்து தற்கொலை. செய்தியை மேற்கொண்டு படித்தால் தற்கொலைக்கு காரணம் தாங்க முடியாத கடன் பிரச்சனை. கணவனும் மனைவியும் தங்கள் சக்தியை உணராது வாங்கிய கடனுக்காக ஒன்றுமறியாத அந்த குழந்தை என்ன செய்தது. அதனுடைய உயிரை போக்க இவர்கள் யார்?

இன்னும் கொடுமை என்ன வென்றால் விஷம் குடித்த அம்மாவும் அப்பாவும் விஷம் குடித்தும் சாக வில்லை, உயிர் பிழைத்து விடுகின்றனர். ஆனால் இவர்களால் விஷம் கொடுக்கப்பட்ட அந்த குழந்தை இறந்துவிடுகிறது. இது என்ன கொடுமை?

ஏற்கனவே இவர்கள் வாங்கிய கடன் பிரச்சனயை கூட முடித்து விடலாம். ஆனால் தங்கள் கையாலேயே கொள்ளப்பட்ட அந்த குழந்தையின் சாவை நினைத்து காலம் பூராவும், தூக்கு தண்டனை கைதியை (appeal ஐ எதிர் நோக்கியிருக்கும் அதாவது தூக்கில் போடுவார்களா அல்லது மாட்டார்களா) போன்ற நிலைமை இவர்களுக்கு. கடன் பிரச்சனையை விட, இவர்களால் கொலை செய்யப்பட்ட குழந்தையின் சாவு எனும் மன பிரச்னைதான் அவர்களை தூங்க விடாமல் கொல்லும்.

கடன் என்பது மனித குலத்திற்கு ஒரு தவிர்க்க முடியாத நிலை. ஆனால் அதற்க்கு ஒரு அளவு உண்டு. கடன் வாங்குவதற்கு முன்பு உங்களை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் யார், உங்கள் சக்தி என்ன, உங்களால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியுமா என்று அறிந்து முடியும் என முடிவான விடை கிடைத்தால் கடன் வாங்கலாம். அதாவது 10000 ருபாய் வருமானம் உள்ள ஒருவர் மாதம் 500 ருபாய் கடனுக்காக செலவு செய்கிறார் என்றால் அதில் அர்த்தம் உண்டு. ஆனால் இதே போன்று பலரிடம் கடன் வாங்கி மாதம் 8000 ருபாய் கடனுக்காக்க செலவு செய்தால் என்ன ஆவது? நான் மேலே சொன்ன தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும்.

எனக்கு வரும் கேள்விகளில் பெரும்பான்மையான கேள்விகள் கடனை பற்றிதான்  அவற்றில் சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி “அய்யா என்னுடைய சம்பளம் மாதம் ருபாய் 7000 ஆனால் எனக்கு இருக்கும் கடன் ருபாய் 14 லட்சங்கள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்கிறார்.
சற்று சிந்தித்து பாருங்கள், இவருடைய வருமானம் என்ன, இவருடைய கடன் எவ்வளவு? அநேகமாக அவர் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி கடனாளியாகி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைப்பது. பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்க வேண்டியது. இது எப்படி என்றால் கடன் என்ற ஒரு சிறு குழியை தோண்ட வேண்டியது. பிறகு அந்த குழியை மூட அதாவது கடனை அடைக்க இன்னும் சற்று பெரிய குழியை இரண்டாவதாக தோண்ட வேண்டியது. பிறகு இரண்டாவது பெரிய குழியை மூட மூன்றாவதாக சற்று பெரிய குழியை அதாவது கடன் குழியை தோண்ட வேண்டியது. இப்படி ஒரு குழியை மூட இன்னொரு கடன் குழியை தோண்ட கடைசியில் ஒரு பெரிய கடன் குழி மூட முடியாமல் நிற்கும். அந்த குழியை மூட யாரும் மேற்கொண்டு கடன் தர தயாராக இல்லை. ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் “கடனை தருகிறாயா இல்லை, இல்லை இந்த குழியில் போட்டு உன்னை மூடி விடவா” என்று மிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். முடிவு, அவர் தோண்டிய குழியிலேயே அவர் சமாதியாகும் நிலை. ஆம், அவர் வாங்கிய கடனாலையே அவருக்கு சாவு.

தற்கொலை என்பது கடனுக்கு சரியான தீர்வு அல்ல.

சரி, பிறகு கடனிலிருந்து மீள்வதற்கு என்னதான் வழி? சிந்திக்க வேண்டும். தேவைபட்டால் மாற்றி சிந்திக்க வேண்டும்.

அதற்கும் ஒரு உண்மை சம்பவத்தை கூறுகிறேன். அவர் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிரார். நல்ல சம்பளம். சம்பளத்திற்கு தகுந்தவாறு கடன் பிரச்னை. நான் மேலே சொன்ன குழி கதையை போல சிறு குழிகள் எல்லாம் மூடப்பட்டு ஒரு பெரிய கடன் குழி அவர் முன் நிற்கிறது. கடன் கொடுத்தவர்கள் அவரை பிய்த்து எடுக்கின்றனர். வீட்டில் வந்து சத்தம் போட்டு அவமான படுத்துகின்றனர். இதற்க்கு மேலும் அவமான படக்கூடாது, ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்.
சிந்தித்ததின் விளைவாக அவருக்கு இரண்டு வழி கிடைக்கிறது. ஒன்று தன்னுடைய வேலையை விட்டுவிட்டு VRS கொடுத்தால், பணம் கிடைக்கும் அதைவைத்து கடனை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்.
மற்றொன்று தனக்கு இருக்கும் சொந்த வீட்டை விற்றால் அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனை அடைத்து விடலாம், என்று நினைக்கிறார்.

பல நாட்கள் திரும்ப திரும்ப யோசனை செய்து அவர் ஒரு முடிவுக்கு வருகிறார்.  VRS கொடுத்தால் இன்னும் நமக்கு இருக்கும் service இலிருந்து வரும் மாதந்திர சம்பளத்தை இழந்து விடுவோம். வீடு இல்லையென்றாலும் வாடகை வீட்டில் குடியிருந்து, VRS கொடுக்காமல் இருந்தால் வேலையிலிருந்து கிடைக்கும் சம்பளத்தை வைத்து நிம்மதியாக காலத்தை ஓட்டலாம். வேலை போக மீதம் உள்ள நேரத்தில் ஏதாவது வேலை செய்து, காசு சேர்த்து இன்னொரு வீடு வாங்கலாம்.

ஆனால் permanent வேலை போனால் திரும்ப கிடைக்காது என்று முடிவுக்கு வந்து, வீட்டை விற்று விட்டு கடனை அடைத்து விடலாம் என்று, கடனை அடைத்து விடுகிறார்.

இப்போது அவர் கடனாளி இல்லை. ஆனால் எப்படியாவது மறுபடியும் வீடு வாங்க வேண்டும் என்ற வெறி அவர் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது.அலுவலகம் போய் வந்து மாலை நேரங்களில், விடுமுறை

நாட்களில், ஓய்வு நேரங்களில் part-time ஆக சில வேலைகளை சொந்தமாக

செய்கின்றார். காசு சேர்க்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு ஒரு வீட்டை

சொந்தமாக வாங்குகிறார்.

அவர் கடனாளியாகி கலங்காமல் மாற்றி சிந்தித்ததால் இப்போது அவருக்கு தான் பார்க்கும் வேலையின் மூலமாகவும் மாத சம்பளம், பகுதி நேரமாக ஓய்வு நேரத்தில் செய்யும் வேலையின் மூலமாகவும் வருமானம், தான் குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு வீடும் அவருக்கு கிடைத்து விடுகிறது.

இவருடைய கடன் பிரச்னை முடிந்து இன்று சந்தோசமாக இருப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனை, சாதாரண சிந்தனை அல்ல சற்று மாற்றி சிந்தித்ததின் விளைவு, இன்று அவர் கடனாளியாக இல்லாமல் சந்தோசமாக இருக்கிறார். இது ஒரு உண்மை சம்பவம்.

சரி, ஜோதிட ரீதியாக ஒருவர் கடனாளியாக ஆவதற்கு காரணம் என்ன?

ஜாதக கட்டங்கள் மனித வாழ்க்கையின் பல அம்சங்கள் என்று என்னுடைய  இந்த வலை பதிவில் பல கட்டுரைகளில் கூறியுள்ளேன். அதுபோன்று ஒரு மனிதன் கடனாளியாவதர்க்கும் அவர் பிறந்த போது அமைந்த சில கிரகங்களின் கூட்டணி, பார்வை, சேர்க்கை போன்றவை காரணமாகின்றன.

அப்படி காரணமாகும் கிரகங்கள் என்ன வென்று கண்டுபிடித்து அவைகளுக்குரிய சாந்தியினை செய்யும்போது, மேற்கொண்டு கடன் ஏற்படாமல் மனதினை சரியாக சிந்திக்க செய்து இருக்கும் கடன் தீர என்ன செய்யவேண்டும் என்ற அடைபட்ட வழி திறந்து விடப்பட்டு, கடன் தீர என்ன  முயற்சி  செய்ய வேண்டும் என்ற வழி பிறக்கும்.

அதை விடுத்து கிரக சாந்தி செய்து விட்டோம், எனவே கடனை அடைப்பதற்கு பணம் கூரையினை பொத்துக்கொண்டு கொட்டும் என்று யாரும் தவறாக நினைக்க கூடாது. நிச்சயம் பணம் கொட்டாது. கூரை வேண்டுமானால் கொட்டும். ஆனால் கடன் பிரச்சனயில் இருந்து மீள முடியாது.

கடனை அடைப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். உரிய முயற்சிகள் செய்யும்போது அந்த கிரகங்களும் உங்களுக்கு துணை நின்று உங்கள் முயற்சியை வெற்றி பெற செய்து அதன் மூலம் உங்களுக்கு ஒரு வருமானத்தை கொடுத்து உங்களை கடனில் இருந்து விடுபட செய்யும். ஆனால் முயற்சி செய்ய வேண்டும் அதற்க்கு கிரகங்களின் அனுகூலமும் வேண்டும்.
     
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

மனைவியின் மூலம் வசதிகள் யாருக்கு கிடைக்கும்?

சிலர் பார்த்தீர்கள் என்றால் திருமணத்திற்கு முன்பு ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். ஏழ்மையான நிலையில் இருந்தாலும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகத்தில் இருப்பார்கள். இவர்களுடைய குடும்ப நிலையை கூட பார்க்காமல் இவருக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு நிற்பார்கள்.

சில பெண்ணை பெற்றவர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள். பல வீடுகள், கார்கள், தோட்டம், நிலம், நகைகள் என்று எதிலும் குறைவில்லாது சகல வசதியுடன் இருப்பார்கள். அவர்களுக்கு பெண் இருந்தால் அந்த பெண்ணை கண் கலங்காமல் காலம் பூராவும் பார்த்து கொள்ளவேண்டும் என்று நல்ல மாப்பிளையை தேடி கொண்டு இருப்பார்கள்.

சிலர் தங்கள் அந்தஸ்துக்கு நிகராக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். காரணம் அந்த மாப்பிளைக்கு அவருடைய அந்தஸ்துக்கு தகுந்தவாறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் பஞ்சம் இருக்காது.

எனவே அந்தஸ்தை பற்றி கவலை படாமல், ஏழையாக இருந்தாலும், நல்ல பழக்க வழக்கங்கள், உத்தியோகம் இருந்தால் அவர்களுக்கு தங்கள் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து விடுவர். அதன் பின்பு அவர் நிலைமை, மனைவியின் மூலமாக வீடு, வாகனம், போன்ற சகல சம்பந்துக்களுடன் சந்தோசமான வாழ்க்கை கடைசி வரையில் இருக்கும்.
இன்னும் சிலர் பார்த்தீர்கள் என்றால் படித்து நல்ல உத்தியோகத்தில் இல்லையென்றாலும் கூட நல்ல பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் போன்றவையினால் கவரப்பட்டு அவருக்கு வசதியான இடத்தில் பெண் அமைந்து விடும்.

இது போன்ற அமைப்பு அதாவது பிறக்கும்போது ஏழையாக பிறந்து கட்டிய மனைவியின் மூலம் வாழ்க்கையின் அணைத்து வசதி வாய்ப்புகளையும் பெரும் அமைப்பு யாருக்கு கிடைக்கும்? ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன பதில்?

மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அணைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் கிரகங்கள் ஒருவருடைய திருமணம் எப்படி இருக்கும் என்று அந்த கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அப்படி இருக்கும்போது ஒருவருடைய திருமணதிற்கு உரிய பாவமான களத்திர ஸ்தானாதிபதி, களத்திர காரகன் நல்ல வலு பெற்று, தீயோர் சேர்க்கை இன்றி பார்வை இன்றி லாபத்தில் இடம் பெற்று இருந்தால் அந்த ஆணுக்கு தான் திருமணம் செய்ய போகும் மனைவியின் மூலம் சொத்துக்கள், வசதி, வாய்ப்புகள் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை.
                     
ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

ஸ்டாக் Exchange எனும் பங்கு சந்தையில் யார் லாபம் சம்பாதிக்க முடியும்?

பங்கு சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சொன்னால் அதில் மிகை இல்லை. ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை அதாவது நல்ல வளமாக இருக்கிறது என்பதை ஒரு நாட்டில் நடை பெரும் பங்கு சந்தை வியாபாரத்தை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு, வெளிநாட்டு முதலீட்டார்களின் பங்களிப்பு போன்றவற்றை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதரத்தை பங்கு சந்தையின் மூலம் தீர்மானித்து கொள்ளலாம்.

இந்த பங்குசந்தையில் ஈடுபடும் அல்லது முதலீடு செய்வதற்கு தனி நபர்களுக்கும் உரிமை உண்டு. தனி நபர்கள் பங்கு முதலீடு செய்வதற்கு காரணம் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி அந்த பங்குகளின் விலை ஏறும்போது அதில் கிடைக்கும் லாப தொகையினை சம்பாதிப்பதற்காக.

ஆனால் முதலீடு செய்யும் எல்லோராலும் லாபம் சம்பாதிக்க முடியுமா?.
ஒரு பங்கு சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் லாபம் சம்பாதிப்பதற்கு பல வித யுக்திகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது எந்த பங்கை எப்போது வாங்க வேண்டும், எப்போது வாங்க கூடாது, எப்போது விற்ககூடாது, எப்போது விற்க வேண்டும், எந்த பங்கை வாங்க கூடாது போன்ற பல யுக்திகள் வேண்டும்.

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பதற்கு சமயோஜித புத்தி அதாவது presence of mind என்பது மிக மிக அவசியம். பங்குச்சந்தையில் லாபம் என்பது யூகம் அடிப்படையில்தான். எனவே மனம் என்பது சரியான நிலையில் சிந்திக்கும் நிலையில் இருந்தால்தான் ஒருவரால் லாபம் சம்பாதிக்க முடியும். வேகமும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் விவேகமும் இருந்தால்தான் லாபம் சம்பாதிக்க முடியும்.


எனக்கு தெரிந்த சிலர் பல வருடங்களுக்கு முன்பு சேமிப்பு அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேர்த்து வாய்த்த ஒரு குறிப்பிட்ட வங்கியினுடைய பங்கை விற்று பல லட்சங்கள் லாபம் பெற்று அந்த லாபத்தினை கொண்டு ஒரு புதிய வீடும் கட்டி விட்டார்.

மற்றும் ஒருவர் பிரபல கம்பனிகளின் பங்குகளை வருட கணக்காக சேர்த்து வைத்து, பல வருடங்கள் கழித்து அந்த பங்குகளை லாபத்துடன் விற்று தன்னுடைய பெண்ணுக்கு திருமணமே நடத்தி வைத்துவிட்டார்.
எப்படி பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பதற்கு வேகத்துடன் விவேகம் தேவைபடுவது போல, பொறுமையும், வதந்திகளை கண்டு பயப்படாமலும் இருக்கவேண்டும்.

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது என்பது மனம் சார்ந்த அறிவு பூர்வமான ஒரு யுக்தியாகும்.

சரி ஜோதிட ரீதியாக ஒருவர் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற அமைப்பை அறிய முடியுமா? முடியும்.

ஒருவர் பிறக்கும்போது அமைந்த கிரகங்கள் மனித வாழ்க்கையின்
ஒவ்வொரு அம்சங்களை தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டு ஒரு மனிதருக்கு நன்மையோ தீமையோ செய்கின்றன. இதை ஒருவருடைய ஜாதக கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை கொண்டு நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய தனஸ்தானம், மன ஸ்தானம், ரோக ஸ்தானம், அட்டம ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானம் இவைகளில் அமைந்துள்ள கிரகங்கள், சேர்ந்த கிரகங்கள், பார்த்த கிரகங்கள் போன்று இன்னும் சில அடிப்படைகளில் ஒருவரால் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்க முடியுமா என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலே கூறிய அமைப்புகள் ஒருவருடைய பிறந்த நேரத்தின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

Finance தொழில் யாருக்கு வெற்றி தரும்?

Finance தொழில் என்றால் ஒருவருக்கு பணம் கடனாக கொடுத்து அந்த கடனுக்கு ஈடாக வட்டியை பெற்றுக்கொண்டு நடத்தும் தொழிலை சொல்லலாம்.

இன்று கடன் வாங்காமல் எந்த ஒரு மனிதனும் வாழ்க்கை நடத்த முடியாது. கடன் என்பது மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. கடன் இல்லாத மனிதன் என்பதை பார்ப்பது அரிது.

சினிமா தொழிலை எடுத்து கொண்டீர்கள் என்றால் கோடிக்கணக்கான ரூபாய்களை கடனாகக பெற்றுதான் ஒரு சினிமா படம் எடுக்கமுடிகிறது. பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள் கடன் வாங்கித்தான் சினிமா படம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். காரணம் கிடைக்கும் லாபத்தில் வட்டி போக மீதம் கிடைக்கும் தொகைக்காக. முதல் இல்லாமல் லாபம் கிடைப்பதால் கடன் வாங்கி சினிமா படம் தயாரிக்கிறார்கள்.

சரி சினிமா தயாரிப்பை விட்டு விடுவோம். நடுத்தர வர்க்கத்தினர் தங்களுடைய வசதிகளை பெருக்கி கொள்ள கடன் கொடுப்பவர்களைதான் நம்பி இருக்கின்றனர். வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களான TV, Fridge, வாஷிங் machine போன்ற பொருட்களை வாங்குவதற்கு கடன் தரும் நிருவனங்களைதான் நாடுகின்றனர்.  

இருசக்கர வாகனம், கார், tractor, போன்ற எத்தனையோ பொருட்களை கடனில்தான் பெரும்பாலானவர்கள் வாங்குகின்றனர்.

கடனில் பொருட்களை தர எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. சிலர் இதை ஒரு நிரந்தர தொழிலாகவும் செய்து வருகின்றனர். Finance நிறுவனம், தங்க நகைகளின் பேரில் கடன் கொடுக்கும் வட்டி கடை, வாகனங்கள் வாங்க Finance நிறுவனம் போன்ற எத்தனையோ கடன் கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.

சரி, எதற்க்காக இவர்கள் இப்படி ஒரு business செய்யவேண்டும்?

கடன் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையினை கொண்டு தங்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய அல்லது அதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

Finance தொழில் செய்து வரும் எல்லோராலும் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெற முடியுமா? ஜோதிட ரீதியாக இதற்க்கு என்ன பதில்?

ஒருவரிடம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெறுவதற்கு அல்லது கொடுத்த பணம் நஷ்டம் இல்லாமல் திரும்ப வருவதற்கு Finance நிறுவனம் நடத்தும் ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளும் சாதகமாக இருக்க வேண்டும்.

ஒருவருடைய தனச்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதி, விரயாதிபதி, இவைகள் நல்ல நிலமையில் அமைந்து, பார்வை, சேர்க்கையில் போன்றவற்றால் பாதிக்கபடாமல் இருந்தால் கடன் கொடுத்து அதன் மூலம் தொழில் நடத்துபவர்களுக்கு நஷ்டம் வராது. கொடுத்த பணமும் பிரச்சனையின்றி திரும்பி வரும்.

அதைவிடுத்து மேலே சொன்ன அமைப்புகள் பாதிக்க பட்டு இருந்தால் கொடுத்த கடனும் திரும்ப கிடைக்காமல், கோர்ட், case என்று அலைச்சலில் விட்டுவிடும்.


எனவே நனைந்து சுமப்பதை விட கிரக சூழ்நிலைகளை ஆராய்ந்து, Finance தொழில் சரியாக வரும் என்று தெரிந்தால் அந்த தொழிலை செய்யலாம் இல்லையென்றால் வேறு பொருத்தமான தொழிலை செய்யலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள 

தைரியம் இல்லாமை ஏன்?

தைரியம் என்பது மனிதர்களுக்கு மிக மிக அவசியம். தைரியம் இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த ஒரு விசயத்தையும் எதிர்கொள்ள முடியாது.


வாழ்க்கை என்பதே ஒரு challenge மாதிரிதான். Challenge இல்லாத வாழ்க்கை என்பது ஒரு சுவாரஸ்யம் இல்லாத திரைப்படம் போன்றதுதான். எப்படி திரைப்படத்தில் கதாநாயகன் காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதற்கு சண்டை போட்டு காதலியை காப்பற்றுகிறாரோ அதுதான் challenge.

ராமபிரான் கூட அசுரனாகிய ராவனிடம் இருந்து சீதையை மீட்பேன் என்று தைரியமாக போர் செய்ததால்தான் ராமாயணம் என்ற ஒரு காவியத்தை பற்றி மனித குலம் தெரிந்து கொண்டது.

ஒருவர் ஒரு வேலைக்கு முயற்சி செய்கிறார் என்றால் பல போட்டியாளர்கள் வருவார்கள், பங்கேற்ப்பார்கள் அவர்களை வென்று நாம் அந்த வேலையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற தைரியம் வேண்டும். இந்த தைரியம் இல்லை என்றால் எந்த வேலைக்குமே செல்ல முடியாது.

அதே போன்று தொழில் செய்யும் ஒருவருக்கு தைரியம் இல்லை என்றால் சக தொழில் செய்பவர்களை பார்த்து பாய்ந்து ஐயோ இவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிட்டார்களே நம்மால் தொழில் செய்ய முடியுமா என்று தைரியம்  இல்லாமல் இருந்தால் தொழிலை மூடிவிட்டு போகவேண்டியதுதான்.

அதே போன்று திருமணம் செய்தால், பிள்ளை பிறக்கும், பிள்ளையை வளர்க்க வேண்டி வரும், விற்கும் விலைவாசியில் பிள்ளையை படிக்க வைக்க முடியுமா, குடும்ப செலவை சமாளிக்க முடியுமா, நமக்கு கிடைக்கும் சம்பளம் போதுமா குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கு என்று தைரியம் இல்லாமல் இருந்தால் கல்யாணமே செய்யாமல் இருந்தால் பிரமச்சாரியாக இருந்து கடைசியில் ஈம கடன்கள் செய்வதர்க்குகூட ஆள் இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்.

தைரியம் என்பதும் புத்திசாளித்தனமான தைரியம் வேண்டும். அவசியமான செயல்களுக்கு மட்டும் தைரியம் அவசியம் தேவை. அவசியம் இல்லாத காரியங்களுக்கு தைரியசாலி என்று எண்ணிக்கொண்டு கோதாவில் இறங்கினால் பிரச்சனைதான் வரும்.

சரி, ஒருவருக்கு தைரியம் இல்லாது குறித்து ஜோதிட ரீதியாக என்ன பதில்?

மனிதன் பிறக்கும் போது அமைந்த கிரகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதக கட்டங்கள் மனிதனின் பல வித விசயங்களை தெளிவு படுத்துகிறது. ஒருவருக்கு தைரியம் குறைவாக அல்லது இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

ஒருவர் பிறக்கும்போது அவருடைய தைரியச்தானதிபதி வலு குறைந்தோ, சேர்க்கைகள், இருப்பிடம், பார்வைகள்  சரி இல்லாமல் இருந்தாலோ அவருக்கு தைரியம் குறைவு அல்லது இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அவருக்கு தைரியமே வராதா? நிச்சயம் தைரியம் வரும். உண்டாகும்.

பாதிக்கப்பட்ட ஸ்தானத்தை சில உரிய வழிமுறைகளின் மூலம் வலுவூட்டும்போது இல்லாத தைரியத்தை வரவழைக்கலாம்.

ஜோதிட ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ள