கோயில் என்றாலே அந்த காலத்தில் முனிவர்களும், மகான்களும் வழிபட்ட தலங்களாகும். ஒவ்வொரு கோயில்கள் உருவான வரலாறுகளை பார்த்தாலே இது விளங்கும். ஒரு சில முனிவர்களுக்கு காட்சி கொடுப்பதற்கென்று
சிவனுடைய கோயில்கள் சில உருவானதாக வரலாறு உண்டு. அந்த முனிவர்கள் எல்லாம் அங்கேயே இருந்து இறை தரிசனம் செய்து உயிருடன் சமாதியானாவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தினமும் நடமாடி இறை தரிசனம் செய்ததினால் அவர்களுடைய காலடி கோயில் சுற்று பிரகாரத்தில் காலடி படாமல் இருக்க முடியாது.
எனவே ஒருவர் அங்க பிரதட்சணம் செய்யும்போது புனித மகான்களும், முனிவர்களும் நடமாடி அவர்கள் காலடி பட்ட இடத்தில, அங்க பிரதட்சணம் செய்பவருடைய உடம்பு படும்போது அவர் மனதாலும், உடலாலும் புனிதபட்டு
தூய்மை அடைகிறார்.