சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி பெயர் வைப்பது?

ஒரு குழந்தை சுக்கிர கிரக ஆதிக்கத்தில் பிறந்தது என்றால் 
அந்த குழந்தையின் பிறவி நட்சத்திரம் பரணி அல்லது  பூரம் அல்லது  பூராடமாக  இருக்கும்.

ஒரு குழந்தை 6  அல்லது 15 அல்லது 24 ஆம் தேதி பிறந்திருந்தாலும் அந்த குழந்தை சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்த குழந்தை என்றும் கூறலாம்.

குழந்தையின்  பிறவி ஜாதகத்தில் சுக்கிரன் நிலை 
என்னவென்று பார்க்க வேண்டும். சுக்கிரன் ஜாதகத்தில் பகையோ,  நீசம்
அடைந்தோ, மறையவோ கூடாது. சுக்கிரன் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்றும் பார்க்கவேண்டும். நட்பு கிரக நட்சத்திரங்களில் நின்றால் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
 
எனவே அந்த குழந்தையின் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது.

அந்த குழந்தையின் பிறந்ததேதி, மாதம், வருடம், மற்றும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை, சுக்கிரன் நிற்கும் நட்சத்திரம்  மற்றும் சுக்கிரனை தவிர வேறு எந்த கிரகம் மிகவும் பலமுள்ளதாக இருக்கிறது என்று பார்த்து இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்.

அப்படி பெயர் வைக்கும் போது 
அந்த குழந்தை வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று 
நலமுடனும் வளமுடனும் வாழ்கின்றது. 

மேலும் சுக்கிரன் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர்
சுகமான வாழ்க்கை அமைய பிறந்தவர் என்று கூறலாம். சொகுசான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ பிறந்தவர் என்றும் கூறலாம். நல்லதொரு மணவாழ்க்கை அமைய வண்டி வாகனங்கள் அமைய ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை நல்லபடியாக இருக்கவேண்டும்.


இந்த வலைப்பதிவின் ஜோதிடரை கீழ் கண்ட படிவத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகளுக்கு கட்டணம் உண்டு.
Name
Email
Date of Birth:DD/MM/Year
Birth Place City/State/Country:
Birth Time AM/PM:
Presently Living:City/State/Country
Your Question(Type in the whitebox)